இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு பிடித்த கேப்டன் சௌரவ் கங்குலி தானாம் இதை ஹர்பஜன் சிங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
ஹர்பஜன் சிங் முதலில் கங்குலி கேப்டன் ஆக இருந்த காலத்தில் தான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.நேற்று முகநூலில் ஹர்பஜன் வந்து ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து கொண்டு இருந்தார் அப்பொழுது தனக்கு பிடித்த கேப்டன் சௌரவ் கங்குலி தான் என்று கூறினார்.
ஹர்பஜன் சிங் இது வரை தோனி தலைமையிலும் கங்குலி தலைமையிலும் விளையாடி இருக்கிறார் இதில் கங்குலி தான் எனக்கு பிடித்த கேப்டன் என கூறினார் ஆனால் என் கனவை நிறைவாகியது தோனி தான் என்றும் கூறியுள்ளார்.
ஹர்பஜன் சிங் இதுவரை இரண்டு ஐசிசி தொடர்களில் விளையாடி இருக்கிறார் அவை உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகும் இதில் இரண்டிலும் இந்தியா அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு தொடர்களிலும் ஹர்பஜன் சிங் தோனி தலைமையில் தான் விளையாடி உள்ளார்.
தற்போது ஹர்பாஜன் சிங் தனது கடைசி ஒரு நாள் போட்டிகள் 2015இல் தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடினார் பிறகு தனது கடைசி டெஸ்ட் போட்டிகளை 2015இல் வங்கதேசம் அணியுடன் விளையாடி உள்ளார், டி20 போட்டிகளில் கடைசியாக 2016இல் UAE அணிக்கு எதிராக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிட்ட தக்கது.
சிறிது நாட்களுக்கு முன்னாள் யுவராஜ் சிங்கும் தனக்கு பிடித்த கேப்டன் கங்குலி தான் என்று கூறியுள்ளார்.