இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா துருப்புச் சீட்டாக இருப்பார்: குளுஸ்னர் சொல்கிறார் 1

தென்ஆப்பிரிக்கா தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு துருப்புச் சீட்டாக இருப்பார் என குளுஸ்னர் கூறியுள்ளார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை கேப் டவுனில் தொடங்குகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த தொடரில் யார் ஆதிக்கம் செலுத்துவார்கள்? யார் யார்? ஜொலிப்பார்கள் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா துருப்புச் சீட்டாக இருப்பார்: குளுஸ்னர் சொல்கிறார் 2
Indian batsman Hardik Pandya plays a shot during the second day of the first Test match between Sri Lanka and India at Galle International Cricket Stadium in Galle on July 27, 2017. / AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகபந்து வீச்சு ஆல்ரவுண்டரான லேன்சி குளுஸ்னர், ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு துருப்புச் சீட்டாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

Cricket, India, Sri Lanka, Virat Kohli, Hardik Pandya, Ben Stokes

இதுகுறித்து குளுஸ்னர் கூறுகையில் ‘‘ஒரு ஆல்ரவுண்டராக பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாக இந்தியாவிற்கு கூடுதல் பலம் சேர்ப்பார். சிறந்த திறமையுடைய ஹர்திக் பாண்டியாவால் இந்தியா பலனடையும். மீடியம் பேஸ் பந்து வீசுவதுடன், லோ-ஆர்டரில் களம் இறங்கி பேட்டிங் செய்வார். அணியை சமமான வகையில் தேர்வு விராட் கோலிக்கு ஹர்திக் பாண்டியா உதவிகரமாக இருப்பார்.

இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா துருப்புச் சீட்டாக இருப்பார்: குளுஸ்னர் சொல்கிறார் 3
India’s Hardik Pandya plays a shot during the second day’s play of the first test cricket match between India and Sri Lanka in Galle, Sri Lanka, Thursday, July 27, 2017. (AP Photo/Eranga Jayawardena)

ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பந்தை பயன்படுத்துவார்கள். தொடக்க நேர்த்தில் ஹர்திக் பாண்டியா ஷார்ட் பந்தை தாக்குப்பிடித்து விட்டால், அதன்பின் பந்தை கணித்து துவம்சம் செய்து விடுவார்’’ என்றார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *