உடனே டெஸ்ட் பிளேயிங் லெவனுக்குள் வரதுக்கு இவர் ஒன்னும் ரிஷப் பண்ட் இல்லை; வெளியே உக்கார வைங்க - புதிய வீரரை பற்றி பேசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்! 1

இஷான் கிஷனுக்கு இன்னும் அனுபவம் போதாது. உடனடியாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பேசியுள்ளார் எம் எஸ் கே பிரசாத்.

இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்டுள்ள இந்த தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

உடனே டெஸ்ட் பிளேயிங் லெவனுக்குள் வரதுக்கு இவர் ஒன்னும் ரிஷப் பண்ட் இல்லை; வெளியே உக்கார வைங்க - புதிய வீரரை பற்றி பேசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்! 2

இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருந்து வந்த ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருக்கிறார். அவரால் கிட்டத்தட்ட 18 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்பதால், அவரது இடத்தை நிரப்புவதற்கு சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும் முதல் முறையாக டெஸ்ட் அணிக்குள் அழைத்து இருக்கிறது பிசிசிஐ.

இதற்கிடையில் இஷான் கிஷன் மற்றும் கேஎஸ் பரத் இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்கிற விவாதங்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. ரிஷப் பன்ட் போன்று இடதுகை பேட்டிங், அதிரடியான அணுகுமுறை மற்றும் கீப்பிங் ஆகியவை ஒரு கலவையாக இருந்து வரும் இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

உடனே டெஸ்ட் பிளேயிங் லெவனுக்குள் வரதுக்கு இவர் ஒன்னும் ரிஷப் பண்ட் இல்லை; வெளியே உக்கார வைங்க - புதிய வீரரை பற்றி பேசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்! 3

அதேநேரம் இந்திய அணியுடன் கிட்டத்தட்ட மூன்று வருடகாலம் பயணித்து வரும் எம்எஸ்கே பிரசாத் பிளேயிங் லெவனில் இடம்பெற துடித்து வருகிறார்.

இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் இந்த விவாதத்திற்கு பதில் கூறியுள்ளார்.

“இஷான் கிஷன் லிமிடெட் ஓவர் போட்டிகளில் அதிக அனுபவம் கொண்டவர். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் அவருக்கு இல்லை. உள்ளூர் போட்டிகளிலும் ஓரிரு போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆகையால் உடனடியாக அவரை பிளேயிங் லெவனில் எடுத்து வருவது சரிவராது.

அதேநேரம் கேஎஸ் பரத் சுமார் இரண்டு வருட காலம் இந்திய அணியுடன் பயணித்து வருகிறார். அதற்குமுன் இந்தியா ஏ அணியில் மூன்று வருடங்கள் விளையாடி இருக்கிறார். உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி இந்திய மைதானங்களின் கண்டிஷன் நன்கு உணர்ந்தவர். இக்கட்டான கேட்ச்களை பிடிக்கக் கூடியவர். இவர் பிளேயிங் லெவலில் கட்டாயம் இருக்க வேண்டும்.

உடனே டெஸ்ட் பிளேயிங் லெவனுக்குள் வரதுக்கு இவர் ஒன்னும் ரிஷப் பண்ட் இல்லை; வெளியே உக்கார வைங்க - புதிய வீரரை பற்றி பேசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்! 4

அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்ற சுழல் பந்துவீச்சாளர்களுக்கு இவரை போன்ற கீப்பர் இருந்தால் இன்னும் பலமாக இருக்கும். கீழ் வரிசையில் நன்றாகவும் பேட்டிங் செய்யக் கூடியவர் என்கிற அடிப்படையில் இவரை அணிக்குள் எடுத்து விளையாட வைக்க வேண்டும்.” என ஆதரவு தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *