ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் எடுத்து அசத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத், டெஸ்ட் பந்துவீச்சாளர்க்கான ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 249 ரன் விட்டு கொடுத்து 11 விக்கெட்டுகளை அள்ளினார் ரங்கனா ஹெராத். இதனால், டெஸ்ட் பந்துவீச்சாளர்க்கான ஐசிசி தரவரிசையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக உள்ளார் ரங்கனா ஹெராத்.
இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் 26வது தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரில் ஜடேஜா, ஹெராத், அஸ்வின் ஆகியோர் விளையாடவுள்ளதால், இந்த தொடர் விறுவிறுப்பாக செல்லும்.
81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத், 384 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஜிம்பாப்வே சுழற்பந்து வீச்சாளர் க்ரேம் கிறீம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்து, 20 போட்டிகள் முன்னேறி இந்த தரவரிசையில் 53வது இடத்தில் உள்ளார்.
இலங்கையின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் 4வது இடத்தில் இருக்கிறார்கள்.
டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான ஐசிசி தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
ஜோ ரூட் 2வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 3வது இடத்திலும், செதேஸ்வர் புஜாரா 4வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5வது இடத்திலும் இருக்கிறார்கள்.
தென்னாபிரிக்காவின் ஹசிம் ஆம்லா 7வது இடத்திலும், சிறிது நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத லோகேஷ் ராகுல் 10வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டருக்கான ஐசிசி தரவரிசையில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் முதல் இடத்திலே இருக்கிறார். இந்திய ஜோடி அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.