Cricket, Virat Kohli, D/L Method, India, Australia

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனக்கு புஜாராவுடன் விளையாட பிடிக்காது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
இந்தியா – இலங்கை இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 2வது நாள் போட்டியின் பயிற்சியின் போது, திடீரென்று கிரிக்கெட் வீரர் புஜாரா மைக்கை எடுத்துக் கொண்டு விராட் கோலியிடம் சென்றார். பின்பு அவரிடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்தார். இவருடன் எனக்கு விளையாட பிடிக்காது : கோலி 1இதனால் வியப்படைந்த விராட் கோலி, புஜாரா கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சிரித்துக் கொண்டே பதில் அளித்து அனைவரையும் திகைக்க வைத்தார். இதில் விராட் கோலியிடம் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி அவருக்கு பிடிக்காத கிரிக்கெட் வீரர் யார்? மற்றும் யாருடன் விளையாட அவருக்கு பிடிக்காது? என்பதுதான்.
மிகவும் கலகலப்பாக நடைபெற்ற இந்த பேட்டியில் விராட் கோலி, புஜாரா பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக புஜாராவின் பொறுமையைக் கண்டு, தான் பல நேரங்களில் வியப்படைந்துள்ளதாகவும், கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற எந்தவொரு விளையாட்டிலும் புஜாரா மிகவும் சிறப்பாக, பிரச்சனை வராதவாறு சில நுணுக்கங்களை கையாண்டு விளையாடுவார் என்றும் தெரிவித்தார். அதேபோல் இப்போது நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவதற்கு காரணமே புஜாரா தான் என்று கோலி தெரிவித்துள்ளார். இறுதியாக கிரிக்கெட் உட்பட அனைத்து போட்டிகளிலும், தன்னை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று இருப்பதால் புஜாராவை பிடிக்காது என்று கோலி சுவாரசியமாக பதில் அளித்தார்.இவருடன் எனக்கு விளையாட பிடிக்காது : கோலி 2

இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 57 ரன்னுடனும், சண்டிமல் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மேத்யூஸ், சண்டிமல் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடினார்கள். ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அஸ்வின், ஜடேஜா சுழற்பந்து வீச்சை இருவரும் எளிதாக எதிர்கொண்டு விளையாடினார்கள். இதனால் இலங்கையின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டிருந்தது. சண்டிமல் 145 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இன்றைய மதிய உணவு இடைவேளையின்போது இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்திருந்தது. மேத்யூஸ் 90 ரன்னுடனும், சண்டிமல் 46 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இவருடன் எனக்கு விளையாட பிடிக்காது : கோலி 3

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சண்டிமல் மேலும் இரண்டு ரன்கள் எடுத்து தனது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் விளையாடிய சமரவிக்ரமா 33 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த சில்வா, டிக்வெல்லா ஆகியோரை அடுத்தடுத்து டக்அவுட்டில் அஸ்வின் வெளியேற்றினார். இதனால் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சண்டிமல் சிறப்பாக விளையாடினார்.

லக்மலை 5 ரன்னில் மொகமது ஷமியும், காமகேயை 1 ரன்னிலும் ஜடேஜா வெளியேற்ற இலங்கை 9 343 ரன்கள் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது.இவருடன் எனக்கு விளையாட பிடிக்காது : கோலி 4

கடைசி விக்கெட்டிற்கு சண்டகன் களம் இறங்கினார். இவர் சண்டிமல் உடன் இணைந்து இன்றைய ஆட்ட நேரம் முடியும் வரை ஆல்அவுட் ஆகாமல் பார்த்துக் கொண்டார். இதனால் இலங்கை 3-வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்துள்ளது.

தற்போது வரை இலங்கை 180 ரன்கள் பின்தங்கியுள்ளது. நாளைய நான்காவது நாள் ஆட்டத்தில் விரைவில் இலங்கையை ஆல்அவுட் செய்து விட்டு, இந்தியா அதிரடியாக விளையாடி ரன்குவித்து இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *