அஷ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் அணிக்கு திரும்பினால் இன்னும் சிறப்பாக இருக்கும் 1

சில மாதங்களுக்கு முன்னர் வரை இந்திய அணிக்கு அனைத்து விதமான போட்டிகளுக்கும் தூணாக இருந்தனர் அஷ்வின் மற்றும் ஜடேஜா. இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் வரலாற்றை மாற்றி எழுதும் விதமாக அனைத்து போட்டிகளிலிம் வென்றெடுத்தது இந்தியா.

அப்படி ஒரு வெற்றியை இந்திய அணிக்கு ஏற்ப்படுத்தித் தர மிக முக்கிய காரணம் அஷ்வின் மற்றும் ஜடேஜா சுழல் இணைகள். இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்து சில நாட்களில் அங்கு நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது.

அஷ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் அணிக்கு திரும்பினால் இன்னும் சிறப்பாக இருக்கும் 2
India’s Ravichandran Ashwin, left, appeals unsuccessfully for the wicket of Sri Lanka’s captain Dinesh Chandimal during the third day’s play of their third cricket test match in Pallekele, Sri Lanka, Monday, Aug. 14, 2017. (AP Photo/Eranga Jayawardena)

இந்த அணியில் இருவரது பெயரும் இல்லை, மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங்கின் பெயரும் இல்லை. உடனடியாக ஏன் மூவரும் இல்லை எனக் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் மூவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும், அஷ்வின் கவுன்ட்டி தொடரில் சென்று அங்கு சற்றி சிற்றப்பாக செயல்பட்டார். அந்த இலங்கை ஒருநாள் தொடரில் இந்திய அணி அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் இடத்தில் குல்தீப் மற்றும் யுஜவேந்திர சகால் ஆகியோரை வைத்து விஷப்பரிட்சை நடத்தியது.அஷ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் அணிக்கு திரும்பினால் இன்னும் சிறப்பாக இருக்கும் 3

எதிர்பார்த்தது போலவே குல்தீப்&சகால் இணை சக்கை போடு போட்டு அணியின் தொடர் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. அங்கு நடைபெற்ற டி20 தொடரில் இருவரை வைத்தி விளையாட அனுபவம் வாய்ந்த வீரர்கள் போல் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.

அடுத்தடுத்து ஆஸ்திரேலியா மறூர்ம் நியூசிலாந்து தொடரிலும் அவர்களை வைத்து இந்திய அணி விளையாட அணியின் தொடர் வெற்றிகளை பெற்றது. மேலும், 2019 உலகக்கோப்பையை மனதில் வைத்து இருவரையும் தயார் செய்வது போல் செய்திகள் வந்தன.

அஷ்வின் மற்றும் ஜடேஜாவை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் வைத்து விளையாடினால் இன்னும் அணி வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும் எனவும் பேசப்பட்டன. அதற்கேற்றார் போல், தேர்வுக்குழு தலைவர் இந்திய அணியில் விளையாட தற்போது பல வீரர்கள தேர்வாகியுள்ளனர். Cricket, India, New Zealand, Virat Kohli, Kuldeep Yadav, Ravi Ashwinஅவர்களை மாற்றி சுழற்சி முறையில் விளையாட வைத்தால் அநேக வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும், வீரர்களும் உற்சாகமாக இருக்கும் என கூறினார்.

அந்த சுழற்சி முறையில் நன்றாக தேர்ச்சியடைந்த உடல் தகுதியுள்ள அஷ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வளித்தது தான் மிச்சம். இன்று (நவ்.1) இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்தில் துவங்கவுள்ளது. இந்த போட்டியுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா ஓய்வு பெறவுள்ளார்.Bharat Arun, Impressed, Bowling, Team India, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, India Vs New Zealand

தற்போது ஆசிஷ் நெஹ்ரா இந்தியாவின் சுழல் இணைகளைப் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார், அவர் கூறியதாவது

அஷ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இந்தியாவின் ஒருநாள் அணிக்கு திரும்பினால் நான் மகிழ்ச்சியடைவேன். உள்ளூர் வீரர்களுக்கு பந்து வீசுவது மிகக் கடினமான ஒன்றாகும்.

தற்போது ஒருநாள் அணியில் ஏன் இல்லை என எந்த ஒரு காரணமும் சொல்லாமல், அணியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. தற்போது இருவரும் ரஞ்சி கோப்பைகளில் பந்து வீசி வருகின்றனர்.அஷ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் அணிக்கு திரும்பினால் இன்னும் சிறப்பாக இருக்கும் 4

இருவடும் இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கு அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர்கள் இருவரும் ஒருநாள் அணியில் இருப்பது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

எனக் கூறினார் நெஹ்ரா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *