8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் ஜூன் மாதம் தொடங்குகிறது.இந்த தொடருக்கான 15-பேர் கொண்ட இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.
15-பேர் கொண்ட இந்த அணிக்கு இயான் மோர்கனை கேப்டனாக நிர்ணயித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
தோள்பட்டை காயம் காரணத்தினால் மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸுடன் நடந்த தொடரில் பங்கேற்காத டேவிட் வில்லே மற்றும் மார்க் வுட், அணியில் இடம்பிடித்தார்கள்.
ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய மூவரும் தனது ஐபில்-இல் பயணத்தை முடித்துவிட்டு, மே 15-ஆம் தேதி இங்கிலாந்துக்கு திரும்புவார்கள்.
இங்கிலாந்து அணி – இயான் மோர்கன், மொயின் அலி, ஜான்னி பேர்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் ப்ளங்கட், அடில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லே, மார்க் வுட்.