சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் இங்கிலாந்தில் ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான வீரர்களை இந்தியாவை தவிர அனைத்து அணிகளும் வெளியிட்டது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்குமா, பங்கேற்காதா என சந்தேகத்தில் இருந்த போது, மே 8-ஆம் தேதி சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கான அணியை வெளியிடுவோம் என பிசிசிஐ அறிவித்தது. அதன்படி மே 8-ஆம் தேடி மதியம் 12 மணி அளவில் இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.
இந்த ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கவுதம் கம்பிர், ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் யாருமே அணியில் இடம் பெறவில்லை.
சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடருக்கான அணியில் விராட் கோலி கேப்டனாக செயல் படுவார். ஐதராபாத் அணியின் தொடக்க வீரராக கலக்கி கொண்டு வரும் ஷிகர் தவானுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் மனிஷ் பாண்டேவும் அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவும், வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் அணியில் இடம் பிடித்திருக்கின்றனர்.
இந்திய அணி – விராட் கோலி (C), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அஜிங்க்யா ரஹானே, எம்.ஸ். தோனி (WK), யுவராஜ் சிங்க், கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, ஹர்டிக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜேஸ்ப்ரிட் பும்ரா.