கடைசி நேரத்தில் மைதானத்தில் இறங்கி சிக்ஸர், பவுண்டரி என விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் மகேந்திர சிங் தோனியை போல், இந்த உலகில் சில பேர் தான் இருக்கிறார்கள். அது போல் ரசிகர்களுக்கு விருந்து படைக்க பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனிக்கு பதிலாக ஹர்டிக் பாண்டியாவை அனுப்பியது இந்திய அணி.
பரோடா ஆல்-ரவுண்டர், அவர் யார் என இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் நிரூபித்தார். அதுமட்டுமில்லாமல், இரண்டாவது பயிற்சி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக பந்துகளை விளாசினார். அந்த போட்டியில் 54 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் அடித்து 80 ரன் அடித்தார்.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடைசி 10 பந்துகள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் இறங்கிய பாண்டியா, கடைசி ஓவரில் முதல் 3 பந்துகளில் மூன்று சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாக படுத்தினார். அவருடைய உதவியால், முதல் இன்னிங்சின் முடிவில் இந்தியா 319 ரன் அடித்தது.
போட்டி முடிந்த பிறகு, தோனிக்கு முன்னதாகவே பாண்டியா இறங்கியதற்கு காரணத்தை கோலி கூறினார். பாண்டியா முதல் பந்தில் இருந்தே அடிக்க கூடிய ஒரு வீரர், அதனால் தான் அவர் 5-வதாக இறங்கினார் என கோலி கூறினார்.
“அவர் வந்தது நம்ப முடியவில்லை. நாம் கடைசியில் மாறினோம், தோனிக்கு முன்பு பாண்டியாவை அனுப்ப கேட்டார்கள், அனைவரும் ஒப்பு கொண்டனர். ஏனென்றால் அவர் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவார். அவர் அடித்த 3 சிக்ஸர் தான் கடைசி நேரத்தில் நடந்த பெரிய மாற்றம் என நினைக்கிறன்,” என கோலி கூறினார்.
இதனால், பாகிஸ்தான் அணியை 124 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.