முதலிடத்தில் இந்தியா, நியூசிலாந்து… அதள பாதாளத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்; புதிய புள்ளி பட்டியல் வெளியீடு
பாகிஸ்தான் – ஜிம்பாப்வே இடையேயான போட்டிக்கு பிறகான புதிய புள்ளி பட்டியல் குறித்து இங்கு பார்ப்போம்.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது.
இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றின் ஒவ்வொரு போட்டியும் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் நடைபெற்று வருகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வசனத்திற்கு ஏற்ப இந்த தொடரில் ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகள் பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை அடித்து துவம்சம் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடி வருவதால், இந்த முறை எந்த எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்பதிலேயே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
தனது முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை அசால்டாக துவம்சம் செய்த நியூசிலாந்து அணி, குரூப் 1 பிரிவிற்கான புள்ளி பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் நீடித்து வருகிறது.
குரூப் 1 பிரிவிற்கான புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இலங்கை அணியும், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளன. அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முறையே நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன.
அதே போல் குரூப் 2 பிரிவிற்கான புள்ளி பட்டியலில், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா அணி மூன்று புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே அணி 3வது இடத்திலும், வங்கதேச அணி 4வது இடத்திலும் உள்ளது. நெதர்லாந்து அணி கடைசி இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் ஜிம்பாப்வே இடையேயான போட்டிக்கு பிறகான புள்ளி பட்டியல்;
Group 1 | P | W | L | D | NRR | Pts | |
1 | நியூசிலாந்து | 2 | 1 | 0 | 1 | 4.45 | 3 |
2 | இலங்கை | 2 | 1 | 1 | 0 | 0.45 | 2 |
3 | இங்கிலாந்து | 2 | 1 | 1 | 0 | 0.239 | 2 |
4 | அயர்லாந்து | 2 | 1 | 1 | 0 | -1.169 | 2 |
5 | ஆஸ்திரேலியா | 2 | 1 | 1 | 0 | -1.555 | 2 |
6 | ஆஃப்கானிஸ்தான் | 2 | 0 | 1 | 1 | -0.62 | 1 |
Group 2 | P | W | L | D | NRR | Pts | |
1 | இந்தியா | 2 | 2 | 0 | 0 | 1.425 | 4 |
2 | தென் ஆப்ரிக்கா | 2 | 1 | 0 | 1 | 5.2 | 3 |
3 | ஜிம்பாப்வே | 2 | 1 | 1 | 1 | 0.05 | 3 |
4 | வங்கதேசம் | 2 | 1 | 1 | 0 | -2.375 | 2 |
5 | பாகிஸ்தான் | 2 | 0 | 2 | 0 | 0.05 | 0 |
6 | நெதர்லாந்து | 2 | 0 | 2 | 0 | -1.625 | 0 |