விராட் கோலி

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிக்கு பிறகு ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

டி20 உலக கோப்பை தொடரில் விறுவிறுப்பாக சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது இந்தியா-பாகிஸ்தான் போட்டி தான். இதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஆனால் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் இந்த போட்டியை காண 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மெல்போர்ன் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

விராட் கோலி

அத்தனை பேருக்கும் எந்தவித குறையும் இன்றி பல்வேறு ஆச்சரியங்களும் திருப்புமுனைகளும் இந்த போட்டியில் நிறைந்திருந்தது. போட்டியின் கடைசி பந்து வரை ஆட்டம் சென்று, இருக்கையின் நுனிவரை ரசிகர்களை அமர வைத்தது. பல்வேறு மறக்க முடியாத தருணங்களை இப்போட்டி கொடுத்திருக்கிறது.

இந்திய அணி கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அதேபோல் பந்துவீச்சில் அசத்திய அர்சதீப் சிங் 4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் அணியை திணறலுக்கு உண்டாக்கினார். இந்த போட்டிக்கு பிறகு ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

பேட்டிங் தரவரிசை

பேட்டிங் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை, விராட் கோலி 635 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் ரிஸ்வான் தொடர்ந்து 839 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வாய் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் 828 பள்ளிகளுடன் சூரியகுமார் யாதவ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சு தரவரிசை பட்டியலை பொறுத்தவரை முதல் இடத்தில் இருந்த ஜோஸ் ஹேசல்வுட் ஒரு இடம் பின்தங்கி இரண்டாவது இடத்திற்கு சென்று இருக்கிறார். தற்போது முதல் இடத்தை ரசித் கான் மீண்டும் பிடித்திருக்கிறார்.

தரவரிசை

பந்துவீச்சு தரவரிசையில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இருக்கிறார். அது புவனேஸ்வர் குமார் மட்டுமே. இவர் பத்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *