இந்தியாவுடன் தோல்வி, நியூசிலாந்து அணி தர வரிசையில் சரிவு

நியூசிலாந்து அணி இந்தியாவின் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போடிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வந்தது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற வெற்றிக்கணக்கில் இந்திய அணி வென்றது.

இந்நிலையில் நேற்று டி20 தொடரைத் தீர்மானிக்கும் 3ஆவது போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 6 ரன் விதயாசத்தில் தோல்வியடைந்தது. 

மேலு, டி20 போட்டிகளுக்கான தரவரிசப்பட்டியளில் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் ஏற்ப்பட்ட தோல்வியின் காரணமாக 2ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதனால் இரண்டாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி முதலிடத்தைப் பிடித்தது.

மேலும் இந்த தொடரை வென்றதால் இந்திய அணிக்கு எந்த பாதிப்பபும் இல்லை. இந்திய அணி மீண்டும் தனது 5ஆவது இடத்தில் நீடிக்கிறது.

சர்வதேச டி20 போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியல் :

  1. பாகிஸ்தான் – 124 ரேட்டிங்
  2. நியூசிலாந்து – 120 ரேட்டிங்
  3. வெஸ்ட் இண்டீஸ் – 120 ரேட்டிங்
  4. இங்கிலாந்து – 119 ரேட்டிங்
  5. இந்தியா – 119 ரேட்டிங்
  6. தென்னாப்பிரிக்கா – 112 ரேட்டிங்
  7. ஆஸ்திரேலியா – 111 ரேட்டிங்
  8. இலங்கை – 91 ரேட்டிங்
  9. ஆப்கானிஸ்தான் – 86 ரேட்டிங்
  10. பங்ளாதேஷ் – 76 ரேட்டிங்

நியூசிலாந்து அணிக்கு எதிரான  மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் இருந்தன. இதனால் டி20 தொடர் விறுவிறுப்படைந்தது. மூன்றாவது ஒரு நாள் திருவனந்தபுரத்தில் நேற்று நடைப்பெற்றது. மழை காரணமாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 17 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களும் எடுத்தனர். டிம் சவத்தி, ஈஷ்வர் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 8 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது. வெற்றிக்காக போராடிய கிராண்ட்ஹோம் ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றியுள்ளது.

Editor:

This website uses cookies.