விராட் கோலிய இல்லை; இவரோட விக்கெட்டை தூக்குனா ஆஸ்திரேலியாவுக்க்கு தான் வெற்றி - ஆஸி., அணிக்கு முன்னாள் வீரர் அறிவுரை! 1

இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி இவரது விக்கெட்டை குறிவைத்து தூக்க வேண்டும், அப்போது தான் வெற்றிக்கு முயற்சிக்க முடியும் என்று பேசியுள்ளார் சைமன் டவுல்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அணியை இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலிய இல்லை; இவரோட விக்கெட்டை தூக்குனா ஆஸ்திரேலியாவுக்க்கு தான் வெற்றி - ஆஸி., அணிக்கு முன்னாள் வீரர் அறிவுரை! 2

முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு முதலில் ரோகித் சர்மாவின் பேட்டிங் அணுகுமுறை மிக முக்கிய காரணமாக இருந்தது. மத்த பேட்ஸ்மன்கள் சொதப்பிய போது தனி ஆளாக நிதானத்துடன் பந்துவீச்சு எதிர் கொண்டு விளையாடினார் அடுத்ததாக அக்ஸர் பட்டேல் மற்றும் ஜடேஜா பேட்டிங் பார்ட்னர்ஷிப் உதவியது. பவுலிங்கில் ஜடேஜா மற்றும் அஷ்வின் அசத்தியதால் வெற்றி சாத்தியமானது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை கட்டுப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றால் ரோகித் சர்மாவின் விக்கெட் மிகவும் முக்கியமானது அவர்தான் என்று பேசியுள்ளார் சைமன் டவுல்.

விராட் கோலிய இல்லை; இவரோட விக்கெட்டை தூக்குனா ஆஸ்திரேலியாவுக்க்கு தான் வெற்றி - ஆஸி., அணிக்கு முன்னாள் வீரர் அறிவுரை! 3

“இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கப் போவது ரோகித் சர்மா. அவரது அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. நீங்கள் அவரை தாக்க முயற்சித்தால் அவர் நம்மை இரண்டு மடங்காக பதில் தாக்குதல் கொடுத்து அடக்குவார். அப்படிப்பட்ட பேட்ஸ்மேன் ஆவார். வழக்கமான அணுகுமுறையை அவரிடம் பயன்படுத்த முடியாது.

ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு அணுகுமுறை ஆக்ரோஷமாக தெரிகிறது. அதேபோல் அவரது பேட்டிங்கில் குறிப்பிட்ட சில ஷாட்டுகள் மிகவும் நன்றாக வந்துவிட்டால் ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடுகிறார். குறிப்பிட்ட நேரம் களத்தில் இருந்துவிட்டால் எதிரணிக்கு அது பெரிய சிக்கலை கொடுத்து விடும். இரண்டாவது டெஸ்டில் ரோகித் சர்மாவை களத்தில் நிலைத்து நிற்க ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் அனுமதித்து விட்டால் அது அவர்களுக்கு தான் தலைவலியாக மாறிவிடும். முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா இதை செய்ய தவறிவிட்டது. இந்த இடத்தில் தான் அவர்கள் ஆட்டத்தை நழுவவிட்டார்கள்.” என்றும் பேசினார்.

விராட் கோலிய இல்லை; இவரோட விக்கெட்டை தூக்குனா ஆஸ்திரேலியாவுக்க்கு தான் வெற்றி - ஆஸி., அணிக்கு முன்னாள் வீரர் அறிவுரை! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *