கதை என்ன?
சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள டி20 பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்க்கான தரவரிசை வெளியிட்டது. இந்த டி20 பந்துவீச்சாளர்கான தரவரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் இமாட் வாசிம் முதல் இடத்தில் உள்ளார்.
ஒரு வேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால்….
இந்த தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பந்து வீச்சில் ஜொலிக்காவிட்ட காரணத்தினால் தன் முதல் இடத்தை இழந்தார். 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிது இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த தொடர் முடிந்ததும் டி20 பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்க்கான தரவரிசையை வெளியிட்டது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.
விவரங்கள்:
இந்த தொடரில் இரண்டு போட்டிகள் விளையாடிய இம்ரான் தாஹிர் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். இதனால், தன் முதல் இடத்தை பாகிஸ்தானின் இமாட் வாசிமுக்கு கொடுத்தார் தாஹிர். அந்த தரவரிசையில் இரண்டாவதாக இந்தியாவின் ஜேஸ்ப்ரிட் பும்ரா உள்ளார். 10வது இடத்தில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார்.
இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசிய கிறிஸ் மோரிஸ் மற்றும் லியாம் ப்ளங்கட், இந்த பந்துவீச்சாளர்க்கான தரவரிசையில் முன்னேறி உள்ளனர்
அடுத்தது என்ன?
டி20 பேட்ஸ்மேணுகான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தை யாருக்கும் தர மாட்டுகிறார். இதனால், முதல் இடத்தில் அவரே நீடித்து கொண்டிருக்கிறார். அவருக்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் மற்றும் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் இருக்கிறார்கள்.
இங்கிலாந்து – தென்னாபிரிக்கா டி20 தொடர் முடிந்த பிறகு தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் இங்கிலாந்து தொடக்கவீரர் ஜேசன் ராய் ஆகியோர் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் 146 ரன் அடித்து, அந்த தொடரில் அதிக ரன் அடித்திருக்கிறார். இதனால், 12 இடங்கள் தாண்டி 20வது இடத்திற்கு முன்னேறினார் டி வில்லியர்ஸ். அந்த தொடரில் 103 ரன் அடித்த ஜேசன் ராய், 26 இடங்களை தாண்டி 25வது இடத்தில் உள்ளார்.
எழுத்தாளரின் கருத்து:
டி20 அணிகளுக்கான தரவரிசையில் நியூஸிலாந்து அணி முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்திய அணி 118 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணியை விட 7 புள்ளிகளே இந்திய அணிக்கு குறைவாக உள்ளது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுடன் விளையாடவுள்ள டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தரவரிசையில் முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளது.