இந்தியா – ஆஸ்திரேலியா விளையாட வேண்டிய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கைவிடப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவிற்கு திரும்புவதற்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியாவிற்கு நன்றி கூறினார் டேவிட் வார்னர்.
இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாடியது. முதல் ஒருநாள் போட்டி சென்னையில் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி ஒரு மாதமாக இந்தியாவில் இருந்தார்கள். அதற்காக அவர்களை நன்றாக பார்த்துக்கொண்டதால் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தார் வார்னர்.
“மீண்டும் எங்களை இந்தியாவிற்கு அழைத்து விளையாடியதற்கு நன்றி,” என டேவிட் வார்னர் தெரிவித்தார்.
இந்த கிரிக்கெட் விளையாடாடை இந்திய நாட்டில் மதமாக பார்க்கிறார்கள். இதனால், இந்தியாவில் வந்து விளையாடியது சந்தோசமாக இருக்கிறது என வார்னர் கூறினார்.
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் தொடர் 2017-18 இல் விளையாட டேவிட் வார்னர் தயார் படுத்தி கொள்ள போகிறார். ஆஸ்திரேலியா – இங்கிலாந்துக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நவம்பர் 23 ஆம் தேதி தொடங்குகிறது.
“உங்கள் நாட்டுக்கு வந்து கிரிக்கெட் விளையாட ஆசையாக இருக்கிறது,” என வார்னர் மேலும் பதிவிட்டார்.
ஒருநாள் தொடரின் போது ஸ்டீவ் ஸ்மித்துக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பினார். இதனால், அவருக்கு பதிலாக டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பணியாற்றினார்.
மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்காமல் போனதால் ரசிகர்களுக்கு வருத்தம் தெரிவித்தார் வார்னர்.
“ஐதராபாத் போட்டிக்கு மன்னிக்கவும்,” என வார்னர் கூறினார்.
“அடுத்த வருடம் மீண்டும் உங்களை சந்திப்பேன் என நம்புகிறேன்,” என டேவிட் வார்னர் தெரிவித்தார்.
ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர், 4வது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்சுடன் ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சை பறக்க விட்டார். ஆனால், டி20 தொடரில் அவர் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வார்னர் பதிவிட்டதை பாருங்கள்:
https://twitter.com/DrShankarB/status/919083730009972736