டாஸ் தான் முக்கியம்... இது மட்டும் நடந்தால் பாகிஸ்தான் அணியின் வெற்றியை தடுக்கவே முடியாது; முன்னாள் வீரர் உறுதி !! 1
டாஸ் தான் முக்கியம்… இது மட்டும் நடந்தால் பாகிஸ்தான் அணியின் வெற்றியை தடுக்கவே முடியாது; முன்னாள் வீரர் உறுதி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டால் பாகிஸ்தான் அணிக்கே வெற்றி என முன்னாள் பாகிஸ்தான் வீரரான சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று (செப்-2) நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளதால், முன்னாள் இந்நாள் வீரர்கள் என பலரும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

டாஸ் தான் முக்கியம்... இது மட்டும் நடந்தால் பாகிஸ்தான் அணியின் வெற்றியை தடுக்கவே முடியாது; முன்னாள் வீரர் உறுதி !! 2

அந்தவகையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் பாகிஸ்தான் வீரரான சோயிப் அக்தர், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தால் பாகிஸ்தான் அணியே வெற்றியும் பெறும் என ஆரூடம் தெரிவித்துள்ளார்.

டாஸ் தான் முக்கியம்... இது மட்டும் நடந்தால் பாகிஸ்தான் அணியின் வெற்றியை தடுக்கவே முடியாது; முன்னாள் வீரர் உறுதி !! 3

இது குறித்து சோயிப் அக்தர் பேசுகையில், “பாபர் அசாமும் அவர் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மிக சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் அணியின் பல வீரர்கள் அதிக அணுபவமுடையவர்களாக இருப்பது பாகிஸ்தான் அணியின் கூடுதல் பலம். இந்திய அணிக்கு எதிரான போட்டி அதிக அழுத்தமும், சவாலும் நிறைந்த போட்டி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளை எதிர்கொண்ட அணுபவமுடையது என்பதால் அவர்களுக்கு இந்த போட்டி பெரிய சவாலாக இருக்காது என்றே கருதுகிறேன். பாகிஸ்தான் அணி டாஸ் வென்று  முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டால் பாகிஸ்தான் அணியே வெற்றி பெறும். அதே வேளையில் இந்திய அணி டாஸ் வென்றுவிட்டால் பாகிஸ்தான் அணிக்கும் பிரச்சனை தான். முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *