ராபின் உத்தப்பா
இந்திய அணிக்கு வாய்ப்பு இல்ல.. இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்; ராபின் உத்தப்பா சொல்கிறார் 

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள நான்கு அணி எது என்பது குறித்தான தனது கணிப்பை ராபின் உத்தப்பா வெளிப்படுத்தியுள்ளார்.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்று இன்று துவங்கியது. இதில் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

இந்திய அணிக்கு வாய்ப்பு இல்ல.. இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்; ராபின் உத்தப்பா சொல்கிறார் !! 1

இந்திய அணி 23ம் தேதி நடைபெறும் தனது போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. டி.20 உலகக்கோப்பை தொடர் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் வீரர்கள் பலர் இந்த தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு அணியின் பலம், பலவீனங்கள் குறித்தும் பேசும் முன்னாள் வீரர்கள், தங்களது ஆலோசனைகளை வழங்குவதோடு, எந்த எந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், நடப்பு டி.20 உலகக்கோப்பை தொடர் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா, எந்த எந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறித்தான தனது கணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணிக்கு வாய்ப்பு இல்ல.. இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்; ராபின் உத்தப்பா சொல்கிறார் !! 2

இது குறித்து ராபின் உத்தப்பா பேசுகையில், “நான் சொல்வது இந்திய ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகலாம், ஆனால் என்னை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நான்கு அணிகளே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *