Cricket, India, Sri Lanka, VVS Laxman, Dream Test XI

இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் தற்போது விளையாடி கொண்டிருக்கும், அதாவது ஓய்வு பெறாத கிரிக்கெட் வீரர்களை வைத்து ஒரு சிறந்த டெஸ்ட் அணியை தேர்ந்தெடுத்து உள்ளார். ஐதராபாத்தில் பிறந்த வி.வி.எஸ். லட்சுமண் சில இக்கட்டான சூழல்களில் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்காக பல முறை அவர் தனியாளாக வெற்றி வாங்கி தந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிரியாக இருந்தார் லட்சுமண். உலகத்திலேயே நம்பர் 1 பந்துவீச்சாக இருந்த ஆஸ்திரேலிய அணியையே ஓட விட்டு அடித்தார் வி.வி.எஸ் லட்சுமண். அவரது காலத்தில் ஆஸ்திரேலிய அணி தான் நம்பர் 1 அணியாக இருந்தது. டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி, ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி ஆஸ்திரேலிய அணியை பிரித்து மேய்ந்து விடுவார்.

இந்தியா vs இலங்கை 2017: வி.வி.எஸ் லட்சுமணனின் மாடர்ன் டெஸ்ட் அணி 1

2001ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 281* ரன் அடித்தார், அது தான் அவருடைய வாழ்க்கையின் சிறந்த ஆட்டமாக இருந்தது, இப்போதும் அது தான் அவருடைய சிறந்த ஆட்டமாக இருக்கிறது. அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி பெரும் நிலையில் இருந்தது, அதன் பிறகு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார் வி.வி.எஸ் லட்சுமண். இதனால் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா மைதானத்தில் அந்த ஆட்டத்தை விட வேறு யாரும் பிரபலமான ஆட்டத்தை விளையாட வில்லை.

வி.வி.எஸ். லட்சுமண் தற்போது விளையாடி கொண்டிருக்கும், அதாவது ஓய்வு பெறாத கிரிக்கெட் வீரர்களை வைத்து ஒரு சிறந்த டெஸ்ட் அணியை தேர்ந்தெடுத்து உள்ளார். ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்கவீரர் டேவிட் வார்னர் மற்றும் தென்னாபிரிக்காவின் சிறந்த தொடக்கவீரர் ஹாசிம் ஆம்லா, இவரது அணிக்கு தொடக்கவீரர்களாக களமிறங்குவார்கள். அதற்கு அடுத்த படியாக நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்குவார்கள். தற்போது விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் சிறந்த இருக்கிறார்கள், இதனால் அவர்களை லட்சுமண் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

இந்தியா vs இலங்கை 2017: வி.வி.எஸ் லட்சுமணனின் மாடர்ன் டெஸ்ட் அணி 2

5வது மற்றும் 6வது இடத்திற்கு இன்னொரு அணிகளின் கேப்டன்கள் இடம் பிடித்துள்ளார்கள். 5வது இடத்திற்கு இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டும் மற்றும் 6வது இடத்திற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் களமிறங்கி விளையாடுவார்கள். இந்த அணிக்கு விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேனாக தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் களமிறங்குவார்.

ஆல்-ரவுண்டர் இடத்தை பிடித்தார் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன். இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஷகிப் அல் ஹசனுடன் சேர்ந்து சுழற்பந்து வீச்சாளராக செயல்படுவார். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்சல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹெசல்வுட் ஆகியோர் சிறப்பாக பந்துவீசுகிறார்கள், இதனால் லட்சுமண் இவர்களை தேர்ந்தெடுத்து உள்ளார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *