இந்தியாவிற்கு வந்து மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது. முதலில் இந்த சுற்றுப்பயணம் டெஸ்ட் தொடருடன் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இந்த இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடரில் மேலும் ஒரு சாதனையை தூக்கி தன்னுடைய பாக்கட்டில் போட தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் காத்து கொண்டிருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து அவரை நீக்கியதற்கு பிறகு, மீண்டும் அவர் யார் என நிரூபிக்க இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் எடுக்க ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இன்னும் 8 விக்கெட்டுகள் மட்டுமே தேவை படுகிறது. இந்த தொடரில் அவர் 8 விக்கெட் எடுத்துவிட்டால், டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 300 விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை தட்டிச்செல்வார் ரவிச்சந்திரன் அஸ்வின். தற்போது இந்த சாதனையை டென்னிஸ் லில்லீ வைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 200 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் அஸ்வினுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. தற்போது அவர் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 292 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். டென்னிஸ் லில்லீ அவரது 56வது போட்டியில் தான் 300 விக்கெட்டை எடுத்தார். இதனால், சொந்த மண்ணில் அனுபவம் இல்லாத இலங்கை அணியிடம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 8 விக்கெட் எடுப்பது கடினம் அல்ல. அதே நேரத்தில், குறைந்த இன்னிங்சில் 300 விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே வைத்துள்ளார். அவரது 66வது டெஸ்ட் போட்டியில் தான் 300 விக்கெட் எடுத்தார் கும்ப்ளே.
இந்தியாவிற்கு வந்து மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது. முதலில் இந்த சுற்றுப்பயணம் டெஸ்ட் தொடருடன் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அதிவேகமாக 300 டெஸ்ட் விக்கெட் எடுத்த வீரர்கள்:
1. டென்னிஸ் லில்லீ – 56 போட்டிகள்
2. முத்தையா முரளிதரன் – 58 போட்டிகள்
3. ரிச்சர்ட் அட்லீ – 61 போட்டிகள்
4. மல்கொம் மார்ஷல் – 61 போட்டிகள்
5. டேல் ஸ்டெய்ன் – 61 போட்டிகள்
6. ஷேன் வார்னே – 63 போட்டிகள்
7. ஆலன் டொனால்ட் – 63 போட்டிகள்
8.. கிளென் மெக்ராத் – 64 போட்டிகள்
9. பிரெட் ட்ரூமன் – 65 போட்டிகள்
10.. வாக்கர் யூனிஸ் – 65 போட்டிகள்
இலங்கையை ஏற்கனவே துவம்சம் செய்திருக்கும் அஸ்வின்:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கனவே இலங்கை அணியை பிரித்து மேய்ந்துள்ளார். கடந்த முறை அவர் இலங்கையிடம் விளையாடும் போது 3 போட்டிகளில் 17 விக்கெட்டு எடுத்தார். இதுவரை, இலங்கை அணியிடம் 6 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டை எடுத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.