Ravi Ashwin

இந்திய அணியின் முக்கிய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவருக்கு தற்போது இந்திய அணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அஷ்வினின் இடத்தில் இருந்தவர் அணில் கும்ளே. ஆனால், அஷ்வினை கும்ளேவிடம் ஒப்பிட முடியாது. ஆனால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் பிரதானமாக ஆடி வருகிறார். தற்போது உள்ள இந்திய அணியில் டெஸ்ட் போட்டியளில் அதிய விக்கெட் வீழ்த்தியதும் இவரே. தற்போது அவருக்கு 30 வயதாகிறது.618 விக்கெட்டா?? கும்ளேவின் டெஸ்ட் சாதனையை முறியடிப்பது பற்றி அஷ்வின்!! 1

இன்னும் 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் ஆடுவர் எனத் தெரிகிறது அப்படிப் பார்த்தால் 300 விக்கெட்டுகளை நெருங்கியுள்ள அவர் இன்னும் சில வருடத்தில் கும்ளேவின் 618 விக்கெட் சாதனையை முறியடிப்பார் என்றே தெரிகிறது.

அணில் கும்ளேவின் 618 விக்கெட் சாதனையை முறியடிக்கு என்ற எண்ணம் உங்களுள் இருக்கிறதா என்று அஷ்வினிடம் கேட்ட போது,618 விக்கெட்டா?? கும்ளேவின் டெஸ்ட் சாதனையை முறியடிப்பது பற்றி அஷ்வின்!! 2

கண்டிப்பாக இல்லை. நான் அணில் கும்ளேவின் மிகப்பெரிய் ரசிகன். அவர் இந்தியாவின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளராக 619 விக்கெட் எடுத்துள்ளார். நான் 618 விக்கெட் எடுத்தாலே அது எனக்கு கிடைத்த பாக்கிய ஆகும். அந்த 618 விக்கெட் எடுக்கு போது அதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டியா அமையும்.

எனக் கூறினார் அஷ்வின்.

மேலும், அவர் இலங்கையின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் பற்றி பேசினார். தற்போது ஹெராத்திற்கு 39 வயதாகிறது. நாளுக்கு நாள் அவரது பந்து வீச்சில் முன்னேற்ற தான் ஏற்ப்பட்டு வருகிறது. சமீபத்தி இலங்கையுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் முகாது அப்பசின் விக்கெட்டை வீழ்த்திய போது, அவர் 400 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய 14ஆவது வீரரானார்.

அஷ்வின் பேசியதாவது,Cricket, Rangana Herath, Ravichandran Ashwin, Ravindra Jadeja, ICC, Virat Kohli, Steve Smith

ரங்கனா ஹெராத் என்னுடைய ரோல் மாடல்களில் ஒருவராவார். அவர் ஒரு அற்புதமான பந்து வீச்சாளர். ஒவ்வொரு நாளும் தடைகளைத் தாண்டி பந்து வீசி வருகிறார். வயது என்பது நமது உடலைத்தான் குறிக்கிறது. ஹெராத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளும் அவர் முன்னேறி வருகிறார்.

எனக் கூறினார்.

அஷ்வின் இந்தியாவிற்காக பல்வேறு டெஸ்ட் மற்றும் முக்கியமான ஒருநாள் போட்டிகளில் வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுத்திருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 25.26 சராசரியில் 52.4 ஸ்ட்ரக் ரேட்டில்  292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் 32.91 சராசரியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் இவரது செயல்பாடுகள் கடந்த இரண்டு வருடங்களாக செயல்பாட்டில் இல்லை. 2015 உலகக்கோப்பைகுப் பின்னர் வெறும் 17 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதன் சராசரி 40.58 ஆகும்.618 விக்கெட்டா?? கும்ளேவின் டெஸ்ட் சாதனையை முறியடிப்பது பற்றி அஷ்வின்!! 3

அஷ்வின் தற்போது, நாளை நடைபெறவுள்ள நியூசிலாந்துடனான ஒருநாள் போட்டித் தொடருகு தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு முன் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனான ஒருநாள் தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. தொடர்ந்து 3 ஒருநாள் தொடருக்கு அவர் புரக்கணிப்பட்டிருப்பதால் பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ண இருந்தது.

இதனைப் பற்றி அஷ்வினிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,

ஒரு வீரராக என்னால் செய்ய முடிந்ததை செய்வேன். அணியின் தேர்வுகள் பற்றி நான் கருத்து கூற இயலாது. தற்போது என திறனை முன்னேற்றுவதிலேயே என கவன இருக்கிறது. வாய்ப்புகள் வரும் போது மீண்டும் என்னை நிரூபிப்பதிலேயே தற்போது என் கவனம் இருக்கிறது.

இவ்வாறு கூறினார் அஷ்வின்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *