அணியில் இடம்பிடித்தார் ரஹானே… முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில், மோசமான பேட்டிங் காரணமாக இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் இழந்துள்ளது.

இந்நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒருவழியாக ரஹானே இடம்பிடித்துள்ளார். அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா வெளியேற்றப்பட்டுள்ளார். அதே போல் அஸ்வின் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
ஆனால் இந்த போட்டியில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெறவில்லை. பார்தீவ் பட்டேலே விக்கெட் கீப்பராக இந்த போட்டியிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணி;
முரளி விஜய், கே.எல் ராகுல், கோஹ்லி, ரஹானே, புஜாரா, பார்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ராஹ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா.