இலங்கையை தேடி செல்கிறது இந்திய அணி… புதிய தொடர் அறிவிப்பு
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இடையேயான புதிய முத்தரப்பு தொடரை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் தற்போது முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இது வரை தோல்வியையே சந்திக்காமல் ஒவ்வொரு தொடராக கெத்தாக கைப்பற்றி வந்த இந்திய அணி, தென் ஆப்ரிக்காவில் அடைந்து வரும் படுதோல்விக்கு பிறகு இந்திய அணி தனது மண்ணிலும், இலங்கை போன்ற சிறிய அணிகளுடனும் தான் வெற்றி பெறும் என்ற கருத்து நிலவி வருகிறது.

தென் ஆப்ரிக்காவுடனான இந்த தொடர் டிசம்பர் 24ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி இலங்கைக்கு செல்லும் என்று பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.
இலங்கை நாட்டின் 70ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நடைபெற உள்ள இந்த முத்தரப்பு டி.20 தொடரில் இந்திய அணி இலங்கை மற்றும் வங்கதேச அணிகளை எதிர்கொள்ள உள்ளது.
மார்ச் 6ம் தேதி துவங்கும் இந்த தொடர் மார்ச் 18ம் தேதி முடிவுக்கு வருகிறது.
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை மற்றொரு அணியை எதிர்கொள்ளுகிறது.
போட்டி ஆட்டவணை;
6 மார்ச் 2018 : இலங்கை – இந்தியா
8 மார்ச் 2018 : வங்கதேசம் – இந்தியா
10 மார்ச் 2018 : இலங்கை – வங்கதேசம்
12 மார்ச் 2018 : இந்தியா – இலங்கை
14 மார்ச் 2018 : இந்தியா – வங்கதேசம்
16 மார்ச் 2018: வங்கதேசம் – இலங்கை
18 மார்ச் 2018 : ஃபைனல்