அடுத்த வருடம் தென்னாப்ரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதலில் இந்த சுற்றுப்பயணம் டெஸ்ட் தொடருடன் தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் டெஸ்ட் தொடர் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி ஜனவரி 28ஆம் தேதி முடிவடைகிறது. இதனால், இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் இந்திய அணியின் கிரிக்கெட் வாரியம் மும்முரமாக இறங்கி உள்ளது. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை நவம்பர் 27ஆம் தேதி தேர்வு செய்வார்கள்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்தார்கள். மீண்டும் இந்திய அணிக்குள் வந்த தமிழக வீரர் முரளி விஜய், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சதம் அடித்து அசத்தினார். இதனால், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் விராட் கோலி உதவி செய்வார் என தெரிகிறது.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, கேப் டவுன் நகரத்திலும் (ஜனவரி 5-9), இரண்டாவது டெஸ்ட் போட்டி, செஞ்சுரியன் நகரத்திலும் (நவம்பர் 13-17) மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரத்திலும் (ஜனவரி 24-28) இந்திய அணி எதிர்கொள்கிறது.
நவம்பர் 27ஆம் தேதி அன்று இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாடுவாரா விளையாடமாட்டாரா என்று தெரிந்துவிடும்.
தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஹர்டிக் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுத்துள்ளார்கள். ஆனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் அவர் மீண்டும் இந்திய அணிக்கு வர வாய்ப்பிருக்கிறது.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு ஷிகர் தவான் திரும்பி விடுவார் மற்றும் தனது திருமணத்திற்காக அனுமதி கேட்டு சென்ற புவனேஸ்வர் குமார் கண்டிப்பாக தென்னாபிரிக்கா தொடரில் இருப்பார். அவருக்கு பதிலாக அணியில் இடம் பிடிக்க விஜய் ஷங்கர் தென்னாபிரிக்கா தொடரில் இடம் பெறுவது சந்தேகம் தான்.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை நவம்பர் 27அன்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் தேர்வு செய்வார்கள்.