
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று தொடங்கியது.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. கேப்டன் சன்டிமால் அதிகபட்சமாக 57 ரன்னும், கருணாரத்னே 51 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 4 விக்கெட்டும். ரவீந்திர ஜடேஜா, இஷாந்த்சர்மா தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 11ரன் எடுத்து இருந்தது. முரளிவிஜய், புஜாரா தலா 2 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (சனிக்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள்.
முரளிவிஜய்யும், புஜாராவும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
41-வது ஓவரில் இந்தியா 98 ரன்னை தொட்டது. முரளிவிஜய் 57 ரன்னிலும், புஜாரா 33 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இருவரும் தொடர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.