இந்தியா- இலங்கை இடையிளான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் நாளில் இலங்கை அனி பேட்டிங் தேர்வு செய்து ஆடியது. துவக்க முதலே சொதப்பிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 2015 ரன்னிலு முதல் நாளிலேயே ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் 4 விக்கெட்டுக்லை வீழ்த்தினார் சுழற்ப்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின். மேலும், ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த சர்மா 3 விக்கெட்டுக்ளையும் வீழ்த்தினார்.
பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட நேர முடிவில் 11-1 என்ற நிலையில் துவக்க வீரர் கே.எல் ராகுல் விக்கெட்டை இழந்திருந்தது. இரண்டாவது நாளான இண்று இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் மற்றும் முதல் விக்கெட் ஆட்டக்காரர் செட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் களம் இறங்கினர்.
துவக்க முதலே தங்களது ஆதிக்கத்திய செலுத்திய முரளி விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் இலங்கை பந்து வீச்சில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தினர். பொருமையாக ஆடிய இருவரும் இன்றைய நாளின் தேநீர் இடைவேளை வரை ஒரு விக்கெட் கூட விடாமல் ஆடி வருகிறது இந்த ஜோடி.
தற்போது வரை 20 ரன் பிந்தங்கிய நிலையில் 9 விக்கெட்டுகள் கையில் வைத்து ஆடி வருகிறது. முரளி விஜய் 108 ரன்னுடனும் புஜரா 71 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.