இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நடுப்பகுதியில் நீண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வரவுள்ளது.
ஜூலை மாதம் 19ஆம் திகதி இலங்கை வரும் இந்திய அணி, ஜூலை மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கொழும்பில் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதனை தொடர்ந்து, 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஒரேயொரு ரிருவென்ரி போட்டியில் விளையாடவுள்ளது.
சுமார் 42 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் இத்தொடர் முடிவுற்ற பிறகு இந்திய கிரிக்கட் அணி செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி இந்தியா திரும்பவுள்ளது.
போட்டியின் கால நேர அட்டவணை
டெஸ்ட் போட்டிகள்
1வது டெஸ்ட் : ஜூலை 26-30 (பல்லேகல)
2வது டெஸ்ட் : ஒகஸ்ட் 04-08 (காலி)
3ஆவது டெஸ்ட் : ஒகஸ்ட் 12-16 (கொழும்பு எஸ்.எஸ்.சி)
ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்
1வது ஒருநாள் சர்வதேசப் போட்டி : ஒகஸ்ட் 20 (ஆர் பிரேமதாஸ)
2வது ஒருநாள் சர்வதேசப் போட்டி : ஒகஸ்ட் 24 (ரங்கிரி தம்புள்ள)
3வது ஒருநாள் சர்வதேசப் போட்டி : ஒகஸ்ட் 27 (பல்லேகல)
4வது ஒருநாள் சர்வதேசப் போட்டி : ஒகஸ்ட் 30 (பல்லேகல)
5வது ஒருநாள் சர்வதேசப் போட்டி : செப்டம்பர் 03 (ஆர் பிரேமதாஸ)
டி20போட்டி
டி20 போட்டி : செப்டம்பர் 06 (ஆர் பிரேமதாஸ)