இந்திய அணியின் சமீபத்திய வெற்றிகள், விராட் கோலி மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றினால் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று நம்புவதாக முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்க்கார் தெரிவித்தார்.

மும்பையில் நேரு அறிவியல் மையத்தில் கிரிக்கெட் கனெக்ட்ஸ்-இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் உறவுகள் என்ற கண்காட்சியை சுனில் கவாஸ்கர் தொடங்கி வைத்தார், அதில் கலந்து கொண்ட வெங்சர்க்கார், தென் ஆப்பிரிக்கா தொடர் குறித்து கூறும்போது, “ஐசிசி தரவரிசையில் இந்தியா நம்பர் 1 நிலையில் உள்ளது. அனைத்து அணிகளையும் வென்றுள்ளோம். எனவே தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்திலும் சிறப்பாகச் செயல் படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

The third Test cricket match between India and Sri Lanka starts in Pallekele on August 12. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)
இந்திய அணியை உலகத்தரம் வாய்ந்த வீரர் வழி நடத்துகிறார். மேலும் விராட் கோலி நல்ல பார்மில் உள்ளார். பந்து வீச்சும் நன்றாக உள்ளது. அதனால் தென் ஆப்பிரிக்காவில் நிச்சயம் சிறப்பாக ஆடுவார்கள்” என்றார்.
இதே போல் நம்பிக்கை தெரிவித்த சுனில் கவாஸ்கர், “கடந்த ஆண்டு நாம் அவர்களை வீழ்த்திய விதம் வரும் ஆண்டிலும் இங்கிலாந்துக்கு எதிராக தொடரும், சில வேளைகளில் மாணவர்கள் பேராசிரியர்களை விட சிறந்தவர்கள் என்பதை நாம் பிரிட்டீஷாருக்குத் தெரிவிப்போம் என்று கருதுகிறேன்.

நான் அங்கு அதிக ரன்களை எடுக்காவிட்டாலும் இங்கிலாந்து பற்றி எனக்கு இனிமையான நினைவுகள் உள்ளன, அங்கு நிறைய கற்றுக் கொள்ள முடியும். சோமர்செட் அணிக்கு ஒரு சீசன், நல்ல சீசனில் ஆடினேன். அது மறக்க முடியாத அனுபவம்” என்றார் சுனில் கவாஸ்கர்.