ஐ.சி.சி.விதிகளை மீறினார் விராட் கோலி?? 1

நேற்று (நவ்.1) நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 53 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை 7 போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் மோதியுள்ள இந்திய அணி தற்போது தான் முதன் முறையாக அந்த அணியை தோற்க்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரர் ஆசிஷ் நெஹ்ராவும் தனது கிரிக்கெட் வாழக்கையில் இருந்து ஓய்வு பெற்றார். இது இரு செய்திகளையும் தாண்டி தற்போது வேறு ஒரு செய்தி தலைப்புச்செய்தி ஆகியுள்ளது.ஐ.சி.சி.விதிகளை மீறினார் விராட் கோலி?? 2

அந்த தலைப்புச் செய்தி கேப்டன் விராட் கோலி பற்றியதாகும். ஆம், விராட் கோலி விதியை சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் விதிகளை மீறியுள்ளதாக ‘டைம்ஸ் நவ்’ செய்திகளின் தலைப்புகளில் சென்றுகொண்டிருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் விதிப்படி எந்த ஒரு எலெக்ட்ரானிக் பொருட்களையும் போட்டியின் போது வீரர்கள் மைதானத்திற்குள் கொண்டு வருதல் கூடாது. ஆனால், இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியின் போது விராட் கோலி ஒரு ‘வாக்கி-டாக்கியை’ பயன்படுத்தியிருக்கிறார்.ஐ.சி.சி.விதிகளை மீறினார் விராட் கோலி?? 3

இதன் காரணமாக ஊடகங்கள் அவர் ‘வாக்கி-டாக்கி’ பயன்படுத்திய புகைப்படத்தை பதிவிட்டு கேள்விகள் மேல் கேள்விகளாக கேட்டு வருகின்றனர். விராட் கோலி இந்திய அணி பேட்டிங்க் செய்த போது 15 ஆவது ஓவரில் வாக் டாக்கி உபயோகப்படுத்தியுள்ளார்.

மேலும், இதனைப்பற்றி ஐ.சி.சி தற்போது தெளிவு படுத்தியுள்ளது,

விராட் கோலி எந்த ஒரு விதிமுறையையும் மீறவில்லை, மைதானத்தில் வீரர்கள் தொலைதூரத்தில் பேசப்பயன்படும் கைபேசி, டெலிபோன் போன்ற சாதனங்களை பயன்படுத்தத் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருகில் பெவிலியனில் இருப்பவருடன் பேச பயன்படும் வாக்கி டாக்கியை பயன்படுத்திக்கொள்ளாம் எனக் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், வாக்கி டாக்கியஒ உபயோகிக்க விதிகளில் தளர்வு உள்ளது எனவும் கூறியுள்ளது.

இதனால் விராட் கோலி எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் விதியயையும் மீறவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த தெளிவிற்கு முன்னதாகவே பல்வேறு நியூசிலாந்து நாட்டு ஊடகங்கள், விராட் கோலி ஐ.சி.சியின் விதியை மீறிவிட்டதாக ஒரு பட்டிமன்றமே நடத்திவிட்டன. இந்திய ஊடகங்கள் அதற்குமேல் சென்று வீடியோக்களை பதிவிட்டு கேள்விகளை எழுப்பத்துவங்கிவிட்டன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *