ஐ.பி.எல் 2018; ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புகள் அணிகள் எவை..? என்ன செய்ய வேண்டும்..?
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளன. ராஜஸ்தான், பெங்களூர், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்காக கடும் போட்டிகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில் மீதம் உள்ள இரண்டு இடங்களுக்கு, தகுதி பெற மற்ற ஐந்து அணிகளுக்கு எப்படி வாய்ப்பு உள்ளது என்று பார்ப்போம் ..
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Points 12; NRR -0.189)
12 போட்டிகளில் 6 வென்றுள்ளார்கள். கடைசி இரண்டு போட்டியையும் வென்றால் தகுதி பெற்றுவிடுவார்கள். எனினும் ஒரு வெற்றியுடன் மட்டுமே குவாலிஃய் ஆக முடியாது ஏன் என்றால் ரன் ரேட் மைனசில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (Points 12; NRR -0.347)
முதல் 9 போட்டிகளில் 3 மற்றும் வெற்றி பெற்றனர். எனினும் ஜோஸ் பட்லர் அவர்களை துவக்க ஆட்டக்காராக மாற்றியதும் இந்த அணியில் வெற்றி விகிதம் கூடியது. தொடர்ச்சியாக பட்டலர் ஐந்து அரை சத்தம் அடித்துள்ளார். அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் நேரடியாக தகுதி பெறுவார்கள். அதில் ஒரு போட்டி கொல்கத்தாவுடன் மோதுகின்றனர். எனினும் மைனசில் ரன் ரேட் உள்ளதால் ஒரு வெற்றியுடன் தகுதி பெற வாய்ப்பு இல்லை.
கிங்ஸ் பஞ்சாப் (Points 12; NRR -0.518)
முதல் 6 போட்டிகளில் ஐந்து போட்டியில் வெற்றி பெற்ற இந்த அணி, தற்பொழுது அடுத்த 6 போட்டிகளில் 1 மட்டுமே வென்றுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால் தகுதி பெற்று விடும் இந்த அணி. எனினும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் மற்ற அணியுடன் டை – பிரேக்கில் சிக்கிக் கொள்ளும். நேற்றய பெங்களூருவுடனான போட்டியில் படு தோல்வி அடைந்ததால் ரன் ரேட் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. எனவே இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாராக வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் (Points 10; NRR +0.405)
சென்ற முறை சாம்பியன்ஸ் இந்த முறை மற்ற அணிகளின் தூவி வெற்றி வைத்தே இவர்கள் தகுதி பெரும் வாய்ப்பு பற்றி சொல்ல முடியும் என்ற நிலை. புதன் கிழமை புஞ்சைபுடன் தோற்கும் பட்சத்தில் இந்த அணி வெளியேறிவிடும். எனினும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் டை – ப்ரேக்கரில் இந்த அணி அதிக ரன் ரேட் அடிப்படையில் பிளே – ஆப் முன்னேறி விடும்.
பஞ்சாபை ஜெயித்துவிட்டு, டெல்லி அணியிடம் தோற்கும் பட்சத்தில் கூட பிற அணிகளின் தோல்வியை பொறுத்து 12 புள்ளிகளுடன் அதிக ரன் ரேட் வாயிலாக உள்ள செல்ல முடியும். இவர்களுக்கு லக் கை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (Points 10; NRR +0.218)
பஞ்சாப் அணி மற்றும் கொல்கத்தா அல்லது ராஜஸ்தான் தங்களின் மீதம் உள்ள போட்டிகளில் வெற்றி பெரும் பட்சத்தில் பெங்களூரு அணி வெளியேறிவிடும். தங்கள் அடுத்த இரு போட்டிகளில் வென்றால் 14 புள்ளிகளுடன் டை – பிரேக்கில் அதிக ரன் ரேட் வாயிலாக தகுதி பெற முடியும். அதே போல் ஒரு தோல்வி, வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் ரன் ரேட் வாயிலாக செல்லவும் சிறிய வாய்ப்பு உள்ளது. எனினும் மும்பை போல லக் நம்பியே உள்ளது விராட்டின் அணி தகுதி பெரும் சூழலும்.