பட்லர்
பட்லர்
சத்தமே இல்லாமல் பெங்களூர் அணியை சம்பவம் செய்த பட்லர்… கடைசி நேரத்திலும் தேடி வந்த அதிர்ஷ்டம்; அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் டி.20 தொடரின் 19வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 113* ரன்களும், டூபிளசிஸ் 44 ரன்களும் எடுத்தனர்.

கோலி
கோலி

இதனையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் ஒரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் ஒரு ரன் கூட எடுக்காமல் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த ஜாஸ் பட்லர் – சஞ்சு சாம்சன் ஜோடி, பெங்களூர் அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்தது.

சத்தமே இல்லாமல் பெங்களூர் அணியை சம்பவம் செய்த பட்லர்... கடைசி நேரத்திலும் தேடி வந்த அதிர்ஷ்டம்; அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் !! 1

பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 69 ரன்கள் எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த ரியான் பிராக் 4 ரன்னிலும், துருவ் ஜூரல் 2 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்ததாக களத்திற்கு வந்த சிம்ரன் ஹெட்மயருடன் கூட்டணி சேர்ந்த ஜாஸ் பட்லர், மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து ஐபிஎல் தொடரில் தனது 6வது சதத்தை பதிவு செய்ததோடு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியையும் பெற்று கொடுத்தார்.

பெங்களூர் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 4வது வெற்றியை பதிவு செய்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இதன் மூலம் புள்ளி பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *