டெஸ்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன விரித்திமான் சகா கூறியது :
இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன விரித்திமான் சகா தோனி இன்னும் சிறப்பாக தான் செயல் பட்டு கொண்டு இருக்கிறார், அவர் ஓய்வு பெறுவது அவரின் தனிப்பட்ட முடிவு அதை பற்றி தோனி தான் யோசிக்க வேண்டும் என்று டெஸ்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன விரித்திமான் சகா கூறியுள்ளார்.
” அனைவருக்கும் அவர் அவர் வாழ்க்கையில் ஏற்றமும் தாழ்வும் இருக்க தான் செய்யும், அணைத்து போட்டிகளிலும் யாரும் சிறப்பாக விளையாடுவது இல்லை ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாமல் இருக்க தான் செய்யும் ” என்று விரித்திமான் சகா ஹிந்துஸ்தான் பத்திரிகையில் கூறியுள்ளார்.
தோனியின் பங்கு இந்திய அணிக்கு முக்கியமானது தான் அவர் நீண்ட காலமாக இந்திய அணிக்கு தன் திறமையை அளித்து கொண்டு இருக்கிறார்.
” ஒரு வீரர் பத்து போட்டிகளில் விளையாடி இருந்தால் அவர் அந்த பத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியாது ஒரு சில போட்டிகளில் சில தவறுகள் வர தான் செய்யும் ” என சகா மேலும் குறிப்பிட்டு உள்ளார்.
தோனி எப்போதும் அனைவரிடமும் மிகவும் மரியாதையுடன் தான் பேசுவார் அவர் அணைத்து வீரர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் தான் பேசுவார், எந்த நிலையிலும் தாழ்த்து பேச மாட்டார்.
நான் எனது கிரிக்கெட் போட்டிகளை மேலும் சிறப்பாக விளையாட தோனியை பார்த்து தான் கத்து கொள்கிறேன் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் தோனியை பார்த்து தான் அனைத்தையும் கற்று கொள்கிறேன்.
” நான் அவருடன் சென்னை அணியில் விளையாடும் பொழுது தோனியை தான் கவனித்து கொண்டே இருப்பேன். அவர் தன் வீரர்களை எப்போதும் அதிகமாகவே நம்புவார். எந்த நேரத்திலும் அவர்களை விட்டு கொடுக்க மாட்டார். எப்போதும் அனைத்து விஷயங்களையும் பொறுமையாகவே கடைபிடிப்பார் ”
இதுவரை சகா இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் இந்த 25 டெஸ்ட் போட்டிகளில் சகா இதுவரை 1013 ரன்களை அடித்து உள்ளார், இந்த 25 டெஸ்ட் போட்டிகளில் சகா மூன்று சதம் மற்றும் நான்கு அரை சத்தத்தையும் அடித்து உள்ளார்.
தற்போது இந்திய அணி வரும் ஜூலை 26இல் இலங்கை அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் சகா இடம் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிட்ட தக்கது.