ஷிகர் தவான்-க்கு பிசிசிஐ செய்தது பச்சை துரோகம்.. பாவம் அவரோட கிரிக்கெட் வாழ்க்கை இப்படி முடியக்கூடாது – முன்னாள் வீரர் பேச்சு!

தவான் மாதிரி பிளேயருக்கு கிரிக்கெட் வாழ்க்கை இப்படி முடிந்துவிடக் கூடாது என முன்னாள் வீரர் தொட்டா கணேஷ் ட்விட்டரில் பேசியுள்ளார்.

ஜனவரி 3ஆம் தேதி துவங்கும் இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை தனித்தனியாக அறிவித்தது பிசிசிஐ.  ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டிருக்கிறார். கேஎல் ராகுல் துணைகேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பண்டியாவிற்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

2022ல் ஷிகர் தவான் 22 ஒருநாள் போட்டிகள் விளையாடி, 688 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும். இவரது சராசரி 35.00 ஆகும். இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

நன்றாக விளையாடிவரும் ஷிகர் தவான், ஏன் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்? என்று முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அத்துடன், இனிமே ஒருநாள் போட்டிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறாரா? ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிவரும் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? என்கிற பல சந்தேகங்களும் நிலவுகிறது.

இந்நிலையில், ஷிகர் தவான் போன்ற சிறந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை இப்படியாக முடிந்துவிடக்கூடாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் முன்னாள் இந்திய வீரர் தொட்டா கணேஷ். அவரது ட்வீட்டில்,

“இலங்கை தொடரில் தவான் இல்லாதது, அவரது சர்வதேச கிரிக்கெட்  வாழ்க்கை முடிவுக்கு வருவதை குறிக்கிறதா?, இன்றளவும் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பல முக்கியமான தொடர்களில் சிறந்த பங்களிப்பை கொடுக்கும் வீரராக இருக்கிறார். இப்படி அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடியக்கூடாது, இது அநியாயம்.” என பதிவிட்டிருந்தார்.

இலங்கை தொடருக்கான ஒருநாள் அணியில் இஷான் கிஷன், கேஎல் ராகுல் ஆகியோர் ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக துவக்க வீரர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.