தோனி இப்படி செய்வதற்கு வாய்ப்பே இல்லை; வெளிப்படையாக பேசிய கே எல் ராகுல் !! 1

இந்திய அணியின் அதிரடி வீரர் கேஎல் ராகுல் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகர் மகேந்திர சிங் தோனி குறித்து தனது கருத்தை பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகர முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி அனைத்து விதமான தொடர்களிலும் மிக சிறந்த முறையில் செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் ஐசிசியாழ் நடத்தப்படும் அனைத்து விதமான உலக கோப்பையை கோப்பையையும் வென்று கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கான ஒரு தனி அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

தோனி இப்படி செய்வதற்கு வாய்ப்பே இல்லை; வெளிப்படையாக பேசிய கே எல் ராகுல் !! 2

சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு அறிவித்த மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக மட்டும் தற்போது விளையாடி வருகிறார், இவர் மீண்டும் இந்திய அணிக்கு விளையாட மாட்டார் என்ற வருத்தம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருந்த நிலையில், உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஆலோசகராக எம்எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளார், தோனி விளையாடவில்லை என்றாலும் இந்திய அணி உடையில் தோனியை காண்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த உலக கோப்பை தொடரில் தோனியின் ஆலோசனையின் கீழ் செயல்படும் இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருப்பதால் எதிரணி வீரர்கள் மிகப் பெரும் அச்சத்தில் உள்ளனர். தோனியின் வருகை இந்திய அணிக்கு மிகப் பெரும் பலமாக அமைந்து விட்டது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தோனி இப்படி செய்வதற்கு வாய்ப்பே இல்லை; வெளிப்படையாக பேசிய கே எல் ராகுல் !! 3

இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் தோனி குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், எம்எஸ் தோனி மீண்டும் அணிக்கு திரும்பியது மிகவும் சந்தோஷமாக உள்ளது அவருடைய தலைமையின் கீழ் நாங்கள் விளையாடியுள்ளோம், ஆனால் அவர் தற்பொழுது எங்களது ஆலோசகராக இருக்கிறார்.அவர் டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது ஒரு மிகப்பெரும் அமைதியை ஏற்படுத்தி உள்ளது, அந்த அமைதியை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். அவர் எங்களுடன் இருப்பது எங்களுக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கிறது, எங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அவரிடம் தெரிவித்து அதற்கான தீர்வை பெற்றுக் கொள்கிறோம் மேலும் அவருடைய அனுபவம் எங்களுக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கிறது, முதல் மூன்று நாட்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தோம் என்று கேஎல் ராகுல் தெரிவித்தார்.

மேலும் 2021 ஐபிஎல் தொடரோடு எம்எஸ் தோனி ஓய்வே அறிவிப்பார் என்று நான் நம்பவில்லை என்றும் கேஎல் ராகுல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.