தனது சாதனைகளை தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு பரிசளித்த விராத் கோஹ்லி..? வீடியோ
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பல்வேறு சாதனகளை படைத்திருக்கும் கோஹ்லி அதை தனது மனைவியான அனுஷ்கா சர்மாவிற்கு சமர்பித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, தென் ஆப்ரிக்கா உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி, தனது முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியில் முரளி விஜயை(46) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறினாலும், கேப்டன் கோஹ்லி மட்டும் நேற்றில் இருந்து தனி ஒருவனாக போராடி 153 ரன்கள் எடுத்து இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினார்.
இதில் கோஹ்லி 150 ரன்களை கடந்த போது வழக்கமான தனது ஆக்ரோஷ கொண்டாட்டங்களை முடித்தவுடன், கழுத்தில் இருந்த தனது செயினை எடுத்து அதற்கு முத்தம் கொடுத்தார்.
சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா சர்மாவை மணம் முடித்த கோஹ்லி, இன்றைய சாதனைகளை தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு சமர்பித்துள்ளார்.
வீடியோ.,
https://twitter.com/iamkhurram12/status/952859722612293632
இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து போராடிய கோஹ்லி 153 ரன்கள் எடுத்தபோது மோர்னேமார்க்கல்லின் பந்தில் சிக்கி ஆட்டமிழந்தார். இதன் மூலம் 28 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்ரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ளது.