இந்திய அணியில் முன்னாள் சகோதரர்கள் :
இந்திய அணியில் சில வருடங்களுக்கு முன்னாள் இர்பான் பதான் யூசுப் பதான் என இரண்டு சகோதரர்கள் இந்திய அணியில் ஒன்றாக விளையாடி சிறப்பாக விளையாடி கொண்டு இந்திய அணிக்கு பெருமை சேர்த்தார்கள் பிறகு அவர்கள் இருவருமே இந்திய அணியில் இடம் பெறாமல் போய்ட்டார்கள்.இப்பொழுது இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.
இதில் இர்பான் பதான் 2007 டி20 உலக கோப்பையிலும் யூசுப் பதான் 2011 உலக கோப்பை போட்டியிலும் விளையாடி உள்ளார்கள், இதில் சிறப்பு என்னவென்றால் இவர்கள் விளையாடிய உலக கோப்பை போட்டியிலும் இந்தியா கோப்பையை வென்று உள்ளது.
தற்போது இந்திய அணியில் கலக்கி கொண்டு இருக்கும் சகோதரர்கள் :
இவர்களை தொடர்ந்து தற்போது இந்திய அணியில் மிகவும் திறமை வாய்ந்த இரண்டு சகோதரர்கள் குர்னால் பாண்டியா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் அனைவரையும் கவர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் இருவருமே ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரே அணியில் விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.இவர்கள் இருவருமே ஆல் ரவுண்டர்கல் தான், இவர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த இந்த சகோதரர்களில் ஒருவர் இந்தியா அணியில் விளையாடி கொண்டு வருகிறார், அவரை தொடர்ந்து தற்போது குர்னால் பாண்டியா இந்தியா ஏ அணியில் இடம் பிடித்து உள்ளார்.
“என்னுடைய நோக்கம் இந்திய அணியில் சேர்ந்து ஒரு சில போட்டிகளில் இடம் பெறுவது மட்டும் இல்லை,நான் இந்திய அணியில் அனைத்து போட்டிகளிலும் இடம் பெற ஆசை படுகிறேன். அதிலும் குறிப்பாக 2019 உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவதே என் நோக்கம் ஆகும்.நானும் என் சகோதரர் ஹார்டிக் பாண்டியாவும் இந்திய அணியில் 2019 உலக கோப்பையில் விளையாட ஆசை படுகிறேன்.” என்று குர்னால் பாண்டியா கூறியுள்ளார்.
“நான் ஐபிஎல் பதிப்பின் பதிப்பில் நல்ல விளையாட்டு முதல் பருவத்தில் எதிர்க்கும் குழுக்கள் என் விளையாட்டை படிக்கும் என்று எனக்கு தெரியும். ஐபிஎல் போன்ற ஒரு சர்வதேச மட்ட போட்டியில் இரண்டாம் பருவமானது மிகவும் முக்கியமானது என்பதால் எனது பலவீனங்களை நான் வேலை செய்ய வேண்டியிருந்தது.நான் என் விளையாட்டின் இரு அம்சங்களிலும் வேலை செய்தேன், அது பணம் செலுத்தியது, “என்று அவர் கூறினார்.
என் சிந்தனை எளிது. நீங்கள் பேட்டிங் செய்யும் போது, ஒரு பந்து வீச்சாளர் பந்து வீச்சில் ஒரு படி மேலே செல்ல வேண்டும்.ஒரு எதிர்க்கட்சி வீரரின் மனதை வாசிப்பது மிகவும் முக்கியம்.
என் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.என் போட்டியாளர்கள் யார் என்பதை நினைத்து பார்க்க முடியாது.என் வேலை என் திறனை அதிகரிக்க மற்றும் என் திறன்களை சிறந்த செய்ய உள்ளது.அதைச் செய்ய முயலுங்கள், “என்று கூறினார்.
தற்போது இந்தியா ஏ அணியில் குர்னால் பாண்டியா இடம் பிடித்து உள்ளார் :
இந்தியா ஏ அணியில் இடம் பிடித்தவர்கள் :
மந்தீப் சிங்,சுரேஷ் ஐயர்,சஞ்சு சாம்சன்,மனிஷ் பாண்டே(கேப்டன் ),தீபக் ஹூடா,கருண் நாயர்,குர்னால் பாண்டிய,ரிஷாப் பண்ட்(விக்கெட் கீப்பர் ), விஜய் ஷங்கர்,சாஹல்,ஜெயன்ட் யாதவ்,பாசில் தம்பி,முஹம்மத் சிராஜ்,அக்சார் படேல்,கவுல்,தாகூர்.
இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி :
பஞ்சால்,அபினவ் முகுந்த்,சுரேஷ் ஐயர்,அன்கிட்,கருண் நாயர்(கேப்டன்),சுதீப்,இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்),ஹனுமா விஹாரி,ஜெயந்த் யாதவ்,நவதீப் சைனி,முஹம்மத் சிராஜ்,தாகூர்,அன்கித்,அன்கித் ராஜ்புட்.
இந்தியா ஏ போட்டிகள் :
அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் ஆஸ்ட்ரேலியா ஏ மற்றும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுடன் இந்தியா ஏ அணிகளும் சேர்ந்து விளையாட உள்ளது.இதில் இந்தியா அணியில் மனிஷ் பாண்டே கேப்டன் ஆக செயல் பட உள்ளார்.
தற்போது இந்த அணியில் விளையாட போகும் வீரர்களின் பட்டியலை அறிவித்து உள்ளார்கள்.இதில் குர்னால் பாண்டியா, மனிஷ் பாண்டே,கருண் நாயர்,ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் இடம் பெற்று உள்ளார்கள்.
இந்த அணியில் சுரேஷ் ஐயர்,தீபக் ஹூடா,சாஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களும் அணியில் இடம் பிடித்து உள்ளார்கள்.இந்த தொடரில் கருண் நாயர் இடம் பிடித்து இருக்கிறார் இதனால் இவர் ஜூலை மாதம் இலங்கை இந்தியா அணிகள் மோதும் போட்டியில் இடம் பெற மாட்டார். கருண் நாயர் சிறிது மாதங்களுக்கு முன்னாள் படைத்த சாதனை நாம் அனைவருக்குமே நினைவில் இருக்கும்.