Cricket, India, Sri Lanka, Virat Kohli, Kumar Sangakkara

ஒரே வருடத்தில் அதிக ரன்கள் குவித்துள்ள என்னுடைய சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி அடுத்த வருடம் முறியடிப்பார் என சங்ககரா கூறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக திகழும் விராட் கோலி இந்த வருடத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுளளார். நேற்றுடன் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 610 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு இரட்டை சதங்கள், ஒரு சதம் மற்றும் அரைசதம் அடங்கும்.

என்னுடைய சாதனையை விராட் கோலி அடுத்த வருடம் முறியடிப்பார்: சங்ககரா 1
Virat Kohli captain of India raises his bat after scoring 100runs during day one of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 2nd December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

ஒட்டுமொத்தமாக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விராட் கோலி இந்த வருடத்தில் 2818 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டி ஒரே வருடத்தில் 2005-ல் 2833 ரன்கள் குவித்துள்ளார். சங்ககரா 2014-ல் 2868 ரன்கள் குவித்துள்ளார். 16 ரன்கள் எடுத்திருந்தால் ரிக்கி பாண்டிங் சாதனையையும், 51 ரன்கள் எடுத்திருந்தால் சங்ககரா சாதனையையும் முறியடித்திருப்பார்.

Cricket, India, Sri Lanka, Virat Kohli
Virat Kohli captain of India raises his bat after scoring 50 runs during day one of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 2nd December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி அடுத்த வருடம் என்னுடைய சாதனையை முறியடிப்பார் என்று சங்ககரா தெரிவித்துள்ளார்.

என்னுடைய சாதனையை விராட் கோலி அடுத்த வருடம் முறியடிப்பார்: சங்ககரா 2

இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘என்னுடைய சாதனையை முறியடிக்க விராட் கோலி நீண்ட ஆண்டுகள் எடுப்பார் என்று நினைக்கவில்லை. அடுத்த வருடம் என்னுடைய சாதனையை அவர் முறியடிக்கலாம். அதன்பின் மீண்டும் என்னைவிட அதிக ரன்கள் சேர்ப்பார். விராட் கோலி ஒரு மாறுபட்ட கிளாஸ் பேட்ஸ்மேன்’’ என்றார்.

என்னுடைய சாதனையை விராட் கோலி அடுத்த வருடம் முறியடிப்பார்: சங்ககரா 3
Virat Kohli captain of India celebrates his Two Hundred runs during day two of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 3rd December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *