இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கூடிய விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக கூறியிருக்கிறார். சமீபத்தில் நடந்த ஐபில் ஏலத்தில் அவரை யாரும் வாங்கவில்லை, ஆனால் கடைசியில் அவரை பந்துவீச்சு ஆலோசகராக மும்பை இந்தியன்ஸ் அணி நியமித்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் 10 வருடமாக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் 110 போட்டிகளில் 157 விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார்.
“எனக்கு கிரிக்கெட் முடிந்தது என தோன்றுகிறது. இனி என்னால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடமாட்டேன் என்று நினைக்கிறன். நான் கிரிக்கெட்டில் இருந்து கூடிய விரைவில் ஓய்வு பெறுவேன்,” என மலிங்கா கூறினார்.
“இது வரை நான் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பேச வில்லை. அப்படி பேசினால், நான் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் இருந்து வரவேண்டும். என்னுடைய ஐபில் வாழ்க்கை முடிவுக்கு வந்தது, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் புதிய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறேன்.”
“அனைவரும் ஒரு கட்டத்தில் சிக்னல் பெறுவார்கள். உலகின் சிறந்த வாசிம் அக்ரமே அவரது காலம் முடிந்ததும் ஓய்வை அறிவித்தார்.”
“அவர்கள் என்னை தக்கவைக்காதது ஆச்சரியம் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 வருடம் விளையாடி இருக்கிறேன். ஆனால், அடுத்த மூன்று வருடத்திற்கு சிறந்த அணியை உருவாக்க வேண்டும் என்று கூறினார்கள். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என எனக்கும் புரிந்தது,” என மலிங்கா மேலும் கூறினார்.

“எனக்கு 34 வயது ஆகிறது, நான் இளமையாக மாறமாட்டேன். என் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ள இது தான் சரியான நேரம் என்று நினைக்கிறன். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குவேன்.”
“பந்துவீச்சு ஆலோசராக இருந்து அடுத்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருப்பேன். என்னிடம் இருக்கும் திறமையை அவர்களுக்கு கற்றுக்கொடுப்பேன்.”
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேஸ்ப்ரிட் பும்ரா, இந்த அளவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் கலக்குவதற்கு முக்கிய காரணம் மலிங்கா என்று நாம் அனைவர்க்கும் தெரியும். “ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஜேஸ்ப்ரிட் பும்ரா அற்புதமாக பந்து வீசுகிறார். அந்த திறமையும் என்னிடம் இருந்தது. அது போல் திறமை வேண்டும் என்றால் அதிக ப்ரெஷர் இருக்கும் ஐபில் தொடரில் விளையாட வேண்டும்,” என்றார் மலிங்கா.
“ஐபில் தொடரில் இருந்து சர்வதேச கிரிக்கெட் வரை அவர் அற்புதமாக செயல் படுவதை நினைத்தால் எனக்கு சந்தோசமாக இருக்கிறது. அவர் தென்னாபிரிக்காவில் அட்டகாசமாக பந்து வீசுகிறார். அவரது திறமையே அது தான்,” என மலிங்கா தெரிவித்தார்.