சிக்சர் அடிப்து வீரர்களுக்கு எவ்வளவு அலாதியானதோ, அதனைப் பார்க்கும் நமக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. மிக அதிக தூரம் ஸ்டேடியத்தை விட்டு வெளியே அடிக்கும் சிக்சர்களுக்கு சற்று அதிக ஆதரவு இருக்கும்.
ஒரு வீரர், வரும் பந்தை 100 மீட்டர் தூரத்திற்தக்கு திருப்பி அடிக்கிறார் என்றார் அது சாதாரண காரியம் இல்லை. அப்படி அசுரத்தனமாக 100 மீட்டர்களுக்கு மேல் பந்தினை திருப்பி அடிக்கும் மாவீரன்களும் உள்ளனர்.
தற்போது அதிக தூரம் சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியலைப் பார்ப்போம்
10. மகேந்திர சிங் தோனி – 112 மீட்டர்
தோனி என்றாலே சிக்ஸர் அடித்து பினிசிங் செய்யும் வீரர் என்ற பெயரும் உண்டு ஐ.பி.எல் போட்டிகலில் எல்லாம் இவர் தெறிக்கவிடும் அந்த சிக்சர்களை எல்லாம்பார்த்து பிரமித்துப் போயிருப்போம். அதே போல் 2011ல் ஆஸ்திரலியாவில் நடந்த காமன் வெல்த் பேங்க் தொடரில் 112 மீட்டர் சிக்ஸர் அடித்தார் தோனி. இந்திய அணிக்கு வெற்றிபெற 4 பந்துகளுக்கு 12 ரன் தேவைப்பட்ட நிலையில் ஒரு பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து 112 மீட்டர்களுக்கு பறக்க விட்டார் தோனி.
அந்த சிக்சர் வீடியோ கீழே :
https://www.youtube.com/watch?time_continue=93&v=hGlqwkHasdM