2007ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனியை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க காரணத்தை வெளியிட்டார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கும் வரை நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் ட்ராவிடுடன் இருக்கும் போது ஒரு சின்ன பையனாக தான் காட்சி அளித்தார் ராஞ்சியை சேர்ந்த மகேந்திர சிங் தோனி.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பை பெற்று பல சாதனைகளை புரிந்தார். அவரின் வெற்றிக்கு காரணமே எந்த விதமான கட்டத்திலும் கோபம் அடையாமல் பொறுமையாக கையாளுவது தான்.
இதே கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தோனி பதிலளித்தார்:
“இது மிகவும் கடினமான ஒன்றாகும் மூத்த வீரர்கள் பலர் என்னை ஆதரித்தனர். என்னை கேப்டனாக நியமிக்க கலந்தாலோசித்த போது நான் இல்லை. உண்மையை சொல்ல போனால், போட்டியை கணிக்கும் திறமை என்னிடம் இருந்தது,” என தோனி கூறினார்.

“இந்திய அணியில் நான் இளம் வீரராக இருக்கும் போதே போட்டியை பற்றி அறியும் திறன் என்னிடம் இருந்தது. சீனியர் வீரர்கள் இதை பற்றி கேட்டாலும், நான் தயங்காமல் என்னுடைய கருத்தை நான் கூறுவேன். உண்மையை சொல்ல போனால் அப்போது அணியில் மற்ற வீரர்களுடன் நானும் ஒரு நல்ல வீரராக தான் இருந்தேன்,” என தோனி தெரிவித்தார்.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் போது மகேந்திர சிங் தோனிக்கு வெறும் 26 வயது தான். யுவராஜ் சிங், விரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்த போது, கேப்டன் பதவியில் உட்கார்ந்தார் மகேந்திர சிங் தோனி. தோனியை கேப்டனாக நியமிக்க தேர்வாளர்களிடம் தொடர்ந்து பேசியது சச்சின் டெண்டுல்கர் தான் என்பது நம்பவேண்டிய செய்தி.