இதுவரை இந்திய அணிக்காக பல கிரிக்கெட் வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல வீரர்கள் சதம் அடிக்க திணறுகிறார்கள், ஆனால் பல வீரர்கள் இரட்டை சதம், முச்சதம் அடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக இரட்டை சதம் அடித்த வீரர்களை இப்போது பார்ப்போம்.
சுனில் கவாஸ்கர் – 4
இந்திய அணியின் முன்னாள் தொடக்கவீரர் சுனில் கவாஸ்கர் 1971 முதல் 1987 வரை இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். அவர் விளையாடிய 125 டெஸ்ட் போட்டியில் 4 இரட்டை சதம் அடித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 236* ஆகும்.
ராகுல் டிராவிட் – 5
1996ஆம் ஆண்டு அறிமுகம் ஆன இந்திய அணியின் முன்னாள் சுவர் ‘ராகுல் ட்ராவிட் 2012ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13288 ரன் அடித்திருக்கிறார். அவர் 5 இரட்டை சதம் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 270 ஆகும்.
சச்சின் டெண்டுல்கர் – 6
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்கு 1989இல் அறிமுகம் ஆனார். தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 இரட்டை சதம் அடித்திருக்கிறார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 248* ஆகும்.
விரேந்தர் சேவாக் – 6
இந்திய அணியின் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6 இரட்டை சதம் அடித்திருக்கிறார். 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 8500க்கும் மேல் ரன் அடித்திருக்கிறார். இரட்டை சதம் மட்டும் இல்லாமல், இந்திய அணிக்காக இரண்டு முறை முச்சதம் அடித்த ஒரே வீரர் இவர் தான். அவரது அதிகபட்ச ஸ்கோர் 319 ஆகும்.
விராட் கோலி – 6

மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி இந்திய அணிக்காக சிறப்பாக செயல் படுகிறார். 2016ஆம் ஆண்டு வரை ஒரே ஒரு இரட்டை சதம் கூட அடிக்காத விராட் கோலி, 2016ஆம் ஆண்டு மூன்று இரட்டைசதம், 2017ஆம் ஆண்டு மூன்று இரட்டை சதம் அடித்திருக்கிறார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 243 ரன்.