தோனி கிட்ட இருந்த பெருந்தன்மை, ரோகித் சர்மா கிட்ட இல்லை; ஹர்திக் பண்டியா-வை போட்டியாக.. – முன்னாள் வீரர் பேச்சு!

தோனி விராட் கோலிக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்தது போல, ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியா-விற்கு கேப்டன் பொறுப்பை கொடுக்க தயங்குகிறார் என கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா.

ஹர்திக் பாண்டியா டி20 தொடருக்கு மூன்றாவது முறையாக கேப்டன் பொறுப்பேற்று விளையாடி அனைத்து தொடரையும் கைப்பற்றி கொடுத்திருக்கிறார். குறிப்பாக இலங்கை அணியுடன் நடந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத போது வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

2022 ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பேற்று ஹர்திக் பாண்டியா செயல்பட்ட விதத்தினால், பிசிசிஐ பாண்டியா மீது நம்பிக்கை வைத்து கொடுத்த இந்த பொறுப்பை நன்றாக செய்து வருகிறார். இனி டி20 போட்டிகளில் சீனியர் வீரர்களுக்கு இடம் கொடுக்கப்படாது என மறைமுகமாக பிசிசிஐ தெரிவித்து வருகிறது.

அடுத்து வரும் நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரிலும் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு இடமில்லை என்று கூறப்படுகிறது. அதற்கும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ளார்.

ரோகித் சர்மா மற்றும் பிசிசிஐ இரண்டு தரப்பும் டி20 கேப்டன் பொறுப்பு குறித்து எந்தவித நிரந்தரமான முடிவையும் இன்னும் தெரிவிக்கவில்லை. ஹர்திக் பாண்டியா இனி தொடர்ந்து கேப்டனாக இருப்பாரா? அல்லது ரோகித் சர்மா டி20 அணிக்கு திரும்பியவுடன் கேப்டன் பொறுப்பை அவரே எடுத்துக்கொள்வாரா? என்கிற குழப்பங்கள் நிலவி வருகின்றன.

இதனை குறிப்பிட்டு பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா. விராட் கோலியிடம் நேரடியாக கேப்டன் பொறுப்பை கொடுத்துவிட்டு நகர்ந்த தோனிக்கு இருந்த பெருந்தன்மை ரோகித் சர்மாவிடம் இல்லை என சாடியுள்ளார். அஜய் ஜடேஜா கூறியதாவது:

“ரோகித் சர்மா இன்னும் கேப்டன் பொறுப்பு குறித்தும் டி20 எதிர்காலம் குறித்தும் முடிவெடுக்காமல் மௌனம் காத்து வருகிறார். ஒரு நாட்டின் ராஜா எந்த காரணத்திற்காகவும் காத்திருக்க மாட்டார். அப்படியே அவர் காத்திருக்கிறார் என்றால் அடுத்ததாக இன்னொருவருக்கு ராஜா பொறுப்பை கொடுக்க உள்ளார் என்று அர்த்தம். ஆனால் ரோகித் சர்மாவிற்கு அந்த பெருந்தன்மை இருப்பதுபோல தெரியவில்லை.

அடுத்தடுத்து மூன்று தொடர்களில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து பிசிசிஐ மறைமுகமாக கொடுக்கும் செய்திகளை வைத்து ரோகித் சர்மா  இன்னும் எந்தவித முடிவையும் எடுக்காமல் இருக்கிறார் என்றால், இன்னும் கேப்டனாக தொடரவேண்டும் என்கிற எண்ணத்தில் தானே.

கடந்த காலங்களில் மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பை விட்டு விலகுகிறேன் என கூறிய அடுத்த நிமிடமே விராட் கோலி தான் அடுத்த கேப்டனாக சரியான வீரர் என அறிவுறுத்தினார். தேர்வுக்குழுவினரோ பிசிசிஐ அதிகாரிகளோ விராட் கோலிக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கவில்லை. அதை கொடுத்தது தோனி.

ஆனால் ஹர்திக் பாண்டியா விஷயத்தில் ரோகித் சர்மா என்ன சிந்திக்கிறார்? என்பது புரியவில்லை. அணியின் எதிர்காலம் கருதி ஹர்திக் பாண்டியாவிடம் கொடுப்பது சரியானதாகவும் பெருந்தன்மையாகவும் இருக்கும். அணி நிர்வாகமும் ரோகித் சர்மா முடிவிற்காக காத்திருக்கிறது என்று அவருக்கு ஏன் புரியவில்லை? சீனியர் வீரராக இருந்து கொண்டு இப்படி மௌனம் காப்பது இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல.” என்றார்.

Mohamed:

This website uses cookies.