தல தோனி இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது… கவலையில் கவாஸ்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இவ்வளவு சீக்கிரம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்க கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் 28 வருட உலகக்கோப்பை கனவை நிறைவேற்றியவருமான தோனி கடந்த 2014ம் வருடம் திடீரென தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிர்சியளித்தார். மேலும் கடந்த வருடம் ஜனவரி மாதம் தனது கேப்டன் பதவியையும் தானாக முன்வந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து இந்திய அணியை வழிநடத்தி வரும் கோஹ்லியின் தலைமையில் சாதரண வீரராக விளையாடி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெற்றி மேல் வெற்றியை குவித்து வந்தாலும், தோனி தனது ஓய்வை திடீரென அறிவித்து விடுவாரோ என்று ஒவ்வொரு தொடரின் போதும் ரசிகர்கள் கவலை கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென் ஆப்ரிக்கா சென்று மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான சஹாவிற்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் சரியான மாற்று வீரர் இல்லாமல் தவித்து வருகிறது. சஹாவிற்கு பதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்ட பார்தீவ் பட்டேல் பேட்டிங்கில் மட்டுமல்லாமல், கீப்பங்கில் சொதப்பி வருவதால் தினேஷ் கார்த்திக் அவசரமாக தென் ஆப்ரிக்காவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் இந்த நிலைமை குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் “தோனி இவ்வளவு சீக்கிரமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்க கூடாது, அவர் இருந்திருந்தால் இந்திய அணி இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கவாஸ்கார் “இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனக்கு ஏற்பட்ட மிகுந்த நெருக்கடி காரணமாகவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதன் காரணமாகவே இந்திய அணி தனக்கு ஒரு நிரந்தமான விக்கெட் கீப்பர் இல்லாமல் தவித்து வருகிறது. ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளை போல் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு சாதரண
வீரராகவாவது தோனி விளையாடி இருக்க வேண்டும், அவரின் அனுபவமும், ஆற்றலும் இந்திய அணிக்கு மேலும் வலு சேர்த்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.