இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்க் தோனி சினிமா துறையில் கால் பதிக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மகேந்திர சிங்க் தோனி இந்தியாவிற்காக பல கோப்பைகளை வென்று தந்துள்ளார். இதனால் இவரை இந்தியாவின் சிறந்த கேப்டனாக கருதப்படுகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவருக்கு பதிலாக விராட் கோலியை கேப்டனாக நியமிக்கப்பட்டனர். இந்தியாவிற்காக கோலியின் தலைமையில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.
தற்போது நடை பெற்று கொண்டிருக்கும் ஐபில்-இல் புனே அணியின் கேப்டன் பதவியை பறிக்க பட்டது. இதனால், இந்த ஐபில்-இல் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் சினிமாவையும் ஒரு கை பார்த்துவிட துணிந்துவிட்டார் மகேந்திர சிங்க் தோனி. இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவானாக திகழ்ந்த தயானந்த சந்தின் வாழ்க்கை வரலாறு படத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்த படத்தில் சந்தினாக தோனி நடிக்க போவதாக தகவல் வந்தது.