Cricket, India, Sri Lanka, Naman Ojha

நவம்பர் 11ஆம் தேதி நடக்கவுள்ள இலங்கை அணியுடனான பயிற்சி போட்டியில் வாரிய தலைவர் அணியின் கேப்டனாக மத்தியபிரதேச விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் நமன் ஓஜா கேப்டனாக செயல் படுவார்.

இந்த 13-பேர் கொண்ட வீரர்கள் நான்கு மாநிலத்தில் இருந்து தான் தேர்வு செய்தார்கள் – ஐதராபாத், கேரளா, மத்தியபிரதேசம் மற்றும் பஞ்சாப். ரஞ்சி கோப்பை 2017-18 சீசனின் 5வது சுற்றில் இந்த நான்கு அணிகள் விளையாடாது.

ஜூனியர் இந்திய அணி மற்றும் 19-வயதிற்கு உட்பட்டோர்க்கான இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரஞ்சி டிராபி புனிதத்தன்மை உடையது, அனைத்து வீரர்கள்களும் தன் மாநிலத்திற்காக விளையாட வேண்டும் என தெரிவித்தார்.

இதே தான் நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் பயன்படுத்தினார்கள். நியூஸிலாந்துக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாட இரண்டு அணிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது, இதனால் யாரும் ரஞ்சி கோப்பை போட்டிகளை தவறவில்லை.

கேரளா அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற்றுருக்கிறார். பஞ்சாப் அணியின் தொடக்கவீரர் ஜீவன்ஜோட் சிங் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் இல்லாத காரணத்தினால் ஹிமாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிராக அவர் கேப்டனாக செயல் பட்டார்.

தன் முதல் ரஞ்சி கோப்பை போட்டியிலேயே ஹிமாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த அபிஷேக் குப்தாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் சமா மிலிந்த், கேரளாவில் இருந்து சந்தீப் மற்றும் மாத்யாபிரதேசத்தில் இருந்து அவேஷ் கான் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளராக செயல் பட உள்ளார்கள். நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவேஷ் கான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசம் ஆல்-ரவுண்டர் ஜலஜ் சாக்சேனா, தற்போது கேரளா அணிக்காக விளையாடி வருகிறார், அவர் வாரிய தலைவர் அணியின் சுழற்பந்து வீச்சாளராக களமிறங்குகிறார்.

வாரிய தலைவர் அணி: நமன் ஓஜா (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ஜீவன்ஜோட் சிங், சந்தீப், தன்மாய் அகர்வால், அபிஷேக் குப்தா, ரோஹன் பிரேம், ஆகாஷ் பந்தாரி, ஜலஜ் சாக்சேனா, சமா மிலிந், அவேஷ் கான், சந்தீப் வாரியர், ரவி கிரண்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *