வெற்றியை கோட்டை விட்டது இந்தியா… முதல் வெற்றியை ருசித்தது தென் ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற இழந்த நிலையில், தற்போது இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் மூன்று போட்டிகளிலும், ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்திய இந்திய அணி, தொடரிலும் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கோஹ்லி 75 ரன்களும், தவான் 109 ரன்களும், தோனி 42 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 289 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் கேப்டன் மார்கம் 22 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன் பின்னர் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டு.
மழை நிற்பதற்கு நீண்ட நேரம் எடுத்து கொண்டதால் போட்டியின் ஓவர்கள் 28ஆக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கும் 289ல் இருந்து 202 ஆக குறைக்கப்பட்டது.
மழை நின்றபின் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு சிறிது நேரத்தில் ஆம்லா(33), டுமினி(11) மற்றும் டிவில்லியர்ஸ்(26) ஆகியோரின் விக்கெட்டை இழந்தது.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த மில்லர் – க்ளேசன் கூட்டணி தென் ஆப்ரிக்கா அணியை சரிவில் இருந்து மீட்டு மளமளவென ரன் குவித்தது. மில்லர் 39 ரன்னில் விக்கெட்டை இழந்தாலும், அடுத்ததாக வந்த பெல்லாகுலேயே வந்த வேகத்தில் 5 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து மிரட்டியதன் மூலம் 25.3 ஓவரிலேயே 207 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மறுமுனையில் க்ளேசனும் 43 ரன்கள் எடுத்து தென் ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு கை கொடுத்தார்.
தென் ஆப்ரிக்கா அணியை இன்றைய போட்டியில் இந்திய அணி வீழ்த்த தவறியதன் மூலம், தென் ஆப்ரிக்கா அணியின் பிங்க் டே வெற்றிப்பாதை தொடர்ந்துள்ளது.
https://twitter.com/AlauddinKhilj10/status/962405109723516930