அந்த சின்ன பையன கபில் தேவ் கூட கம்பெர் பண்ணாதீங்க; அசாருதீன்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வுடன், ஹர்திக் பாண்டியாவை ஒப்பிடுவது சரியானது அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் ஹர்திக் பாண்டியா, சில சிக்கலான சமயங்களில் கை கொடுத்து இந்திய அணியின் மானத்தை காப்பற்றியதால் இவரை சிலர் இவர் தான் இந்திய அணியின் அடுத்த தோனி, தோனியின் இடத்திற்கு சரியான ஒரு நபர் கிடைத்துவிட்டார் என்று கூறவது உண்டு.
ஆனால், பெரும்பாலானோர் ஆல் ரவுண்டரான இவரை, இந்திய அணியின் உலகக்கோப்பை கனவை நனவாக்கிய முன்னாள் கேப்டன் கபில் தேவ்வுடனே ஒப்பிட்டு புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் “ஹர்திக் பாண்டியாவை கபில் தேவ்வுடன் ஒப்பிடுவது சரியானது எல்ல” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “கபில் தேவ்வுடன் ஹர்திக் பாண்டியாவை ஒப்பிடுவது சரியான முறையல்ல. ஹர்திக் பாண்டியா அந்த நிலையை அடைவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கும். கபில் தேவ்வை போன்ற மற்றொரு வீரர் இந்திய அணிக்கு இனி கிடைப்பாரா என்று தெரியவில்லை, கிடைப்பதும் கஷ்டம் தான். கபில் தேவ் விளையாடிய காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓரே நாளில் 25 ஓவர்கள் வரை கூட பவுலிங் செய்வார், ஆனால் தற்போதையை வீரர்கள் பலர் அதனை நெருங்க கூட முடிவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.