இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். அவருடைய சாதனையை தற்போது முறியடித்திருக்கிறார் செட்டேஷ்வர் புஜாரா. சச்சின் அவரது காலத்தில் டெஸ்ட் மற்றும் ஓருநாள் போட்டிகளில் கலக்கியவர். எப்படியும் சச்சின் ஒரு தொடரில் ஆடினால் கண்டிப்பாக சில சதங்கள் இருக்கும்.

இந்த சதங்களை பார்க்கவே இந்திய ரசிகர் கூட்டம் ஆரவாரமாக டெஸ்ட் போட்டியைக் கூட நாள் முழுக்க உட்கார்ந்து பார்க்கும். அதிலும் இந்திய மண்ணில் என்றால் அவரது ஆட்டம தனியாக இருக்கும். தனது ஊர் இது என அனைத்து பந்து வீச்சாளர்களையும் ஒரு காட்டு காட்டி விடுவார். இந்தியாவி பேட்டிங்கிற்காக பல சாதனைகளை வைத்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். அதில் ஒரு டெஸ்ட் சாதனையை முறியடித்திருகிறார் இந்திய அணியின் இந்நாள் பேட்ஸ்ன்மேன் செட்டேஷ்வர் புஜரா.
ஸெட்டேஷ்வர் புஜாரா இந்தியா அணியில் டெஸ்ட் போட்டிகளுக்காகவே தனியாக தயாரிக்கப்பட்டது போல் இருக்கிறார் புஜரா. ராகுல் ட்ராவிட் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து அவருக்கான மாற்று வீரர் யார் என இந்திய அணி வலை வீசித் தேடியது. அப்பொது தான் வந்து மாட்டினார் செட்டேஷ்வர் புஜாரா.
தனது துவக்க போட்டி முதலே இந்திய அணிக்கு அடுத்த ட்ராவிட் இவர் தான் என நிருபிக்கது துவங்கினார். தற்போது வரை 53 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் மொத்தம் 3 இரட்டை சதம், 14 சதம், 16 அரை சதம் என 53.99 சராசரியில் 4319 ரன் குவித்துள்ளார்.
தற்போது இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் சதம் அடித்து தற்போது வரை ஆடி வருகிறார் புஜாரா.
மேலும், இந்த போட்டியில் சச்சின் டெண்டுகரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன் அடித்த வீரர்ராக சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியாவில் மட்டும் வெறும் 53 ஆட்டத்தில் 3000 ரன் குவித்துள்ளார் புஜரா. முன்னதாக 55 ஆட்டத்தில் 3000 ரன் அடித்திருந்தார் சச்சின் டெண்டுல்கர்.
இந்தியாவில் அதிவேகமாக 3000 டெஸ்ட் ரன்களை அடித்த வீரர்கள் பட்டியல் :
- செதேஷ்வர் புஜரா – 53 ஆட்டங்களில்
- சச்சின் டெண்டுல்கர் – 55 ஆட்டங்களில்
- முகம்து அசாருதின் – 56 ஆட்டங்களில்
- விரேந்தர் சேவாக் – 59 ஆட்டங்களில்
தற்போது வரை இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை விட 194 ரன் முன்னிலையில் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 152 பந்துகளுக்கு 117 ரன்னுடனும் செத்தேஷ்வர் புஜரா 360 பந்துகளுக்கு 143 ரன்னில் அவுட் ஆகிவிட்டார். களத்தில் ரகானே மற்றும் விராட் கோலி ஆடிக் கொண்டிருகின்றனர்.