இந்தியா ஏ அணிக்கும், இந்தியா 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கும் பயிற்சியாளராக பொறுப்பில் உள்ளார். ஆனால், இந்தியா ஏ அணி இங்கிலாந்து செல்ல, இவர்களுடன் ராகுல் செல்லஉள்ளதால் 19 வயதுக்கு உட்பட்டோர் அணி உடன் இலங்கைக்கு செல்லவில்லை.

Express photo by Kevin DSouza ,Mumbai 21-10-2017.
கிரிக்கெட் உலகின் கடவுள் எனப்படும் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். 18 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர், இலங்கை செல்லவிருக்கும் அணியில் சில தினங்களுக்கு முன்பு இடம் பெற்றார்.
அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இந்திய ஏ அணியுடன் இங்கிலாந்து செல்லவிருப்பதால், இலங்கை அணி செல்லவிருக்கும் அண்டர் 19 அணியுடன் செல்லவில்லை.
இதுகுறித்து அர்ஜுன் டெண்டுல்கர், நான் நிச்சயம் ராகுல் டிராவிட் கொச்சிங்கை மிஸ் செய்வேன். நான் மிகவும் ஆவலாக இருந்தேன், ஆனால் இந்த முறை நடக்கவில்லை. இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவேன்.
இனி வரும் போட்டிகளில் அவருடன் இணைந்து செயல்படவும், கற்றுக்கொள்ளவும் ஆவலாக உள்ளேன்.
ராகுலுக்கு பதிலாக ராமன் பொறுப்பேற்று கொச்சிங் செய்யவுள்ளார். இந்த வெற்றி வருகின்ற உலககோப்பைக்கு மிகவும் உக்கமாக இருக்கும். கோப்பையை தக்கவைத்துக்கொள்ள நிச்சயம் கடுமையாக போராட வேண்டியதாக இருக்கும்.