இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார் மற்றும் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயரையும் வாங்கி விட்டார் ஜோ ரூட். அவர் சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்றாலும், தற்போதைய சிறந்த வீரர்களான விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் பட்டியலில் இவரும் இருக்கிறார். 26 வயதிலேயே டெஸ்ட் போட்டியில் 5000 ரன்னுக்கும் மேல் அடித்திவிட்டார், இதனால் இங்கிலாந்து அணிக்கு நடுவரிசையில் சிறப்பாக விளையாட ஒரு சிறந்த பேட்ஸ்மேன் கிடைத்து விட்டது.
அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து ஆஷஸ் தொடர் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இங்கிலாந்தின் முக்கிய வீரராக இருக்க மாட்டார் என ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த நட்சத்திர வீரர் ரிக்கி பாண்டிங் நினைக்கிறார். பல ஆஷஸ் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்த தொடரின் போது அலெஸ்டர் குக் தான் இங்கிலாந்தின் முக்கிய வீரராக காட்சி அளிப்பார் என கூறினார்.
இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் ஒரு நல்ல பார்மில் இல்லை என்றாலும், அவரது அனுபவத்தால் இந்த தொடரில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரராக இருப்பார் என ரிக்கி பாண்டிங் கூறினார்.
“நான் நினைப்பது அலாஸ்டர் குக் தான். நான் ஒரு அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரரை தேர்வு செய்வேன், பிறகு என்னால் முடிந்த வரை அவருக்கு நெருக்கடி கொடுப்பேன். இதனால் அந்த அணியின் பேட்டிங் வரிசையே சரிந்து போகலாம்,” என ரிக்கி பாண்டிங் கூறினார்.
“இந்த நாளின் முடிவில், ஒரு வீரரை டார்கெட் செய்வதென்றால் என்ன? ஒரு வீரரை டார்கெட் விட்டால், தன்னால் முடிந்த வரை அந்த வீரருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் எந்த ஒரு இங்கிலாந்து வீரர் பேட்டிங் செய்து கொண்டிருந்தாலும், அவருக்கும் ஆஸ்திரேலிய அணி நெருக்கடி கொடுக்க வேண்டும்,” என பாண்டிங் மேலும் கூறினார்.
நட்சத்திர வீரர்களான ஸ்டீவன் பின் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் உதவி இல்லாமல், ஆஷஸ் தொடரில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. இதனால், வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டுவர்ட் ப்ரோடு மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோருக்கு தான் அதிக பிரஷர்.
“ஸ்டுவர்ட் ப்ரோடு மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் பந்து வீசும் போது முடிந்த அளவு இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். ஆஷஸ் தொடரில் விளையாடும் போது ஓரிரு வீரர்களின் மேல் மட்டும் கண் வைக்க கூடாது. இதற்கு முன்பு நாம் பார்த்துள்ளோம், அனைத்து வீரர்களுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும்,” என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.