விராட் கோலி, ரோஹித் சர்மா இருக்கலாம்... ஆனா இந்த பையன் டீம்ல இல்லாதது இந்திய அணிக்கு பிரச்சனை தான்; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்கிறார் !! 1
விராட் கோலி, ரோஹித் சர்மா இருக்கலாம்… ஆனா இந்த பையன் டீம்ல இல்லாதது இந்திய அணிக்கு பிரச்சனை தான்; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்கிறார்

ரிஷப் பண்ட் இல்லாதது தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் 10ம் தேதி துவங்க உள்ளது. முதலில் டி20 தொடரும், அதன்பின் ஒருநாள் தொடரும், கடைசியாக டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.

விராட் கோலி, ரோஹித் சர்மா இருக்கலாம்... ஆனா இந்த பையன் டீம்ல இல்லாதது இந்திய அணிக்கு பிரச்சனை தான்; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்கிறார் !! 2

தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் மற்றும் டி.20 தொடருக்கான இந்திய அணியில் பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

டி.20 மற்றும் ஒருநாள் தொடர்களை விட தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அதிக சவாலானது என்பதால், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானது என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரிஷப் பண்ட் இல்லாதது டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி, ரோஹித் சர்மா இருக்கலாம்... ஆனா இந்த பையன் டீம்ல இல்லாதது இந்திய அணிக்கு பிரச்சனை தான்; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்கிறார் !! 3

இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், “தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் விளையாடாத ரோஹித் சர்மா தற்போது அணியில் இடம்பெற்றுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். இந்திய அணி கடந்த முறை தென் ஆப்ரிக்கா அணியை எதிர்கொண்ட போது, கே.எல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான கடந்த தொடரில் கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்தனர். தற்போது கே.எல் ராகுல் அணியில் இருந்தாலும், ரிஷப் பண்ட் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு தான். புஜாரா, ரஹானே என சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்ள போகிறது. தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு சவாலானது தான் என்றாலும், இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியால் டெஸ்ட் தொடரையும் வெல்ல முடியும்” என்று தெரிவித்தார்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி; 

ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், கே.எல் ராகுல், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, பும்ராஹ், பிரசீத் கிருஷ்ணா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *